Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Thursday 28 February 2019

மார்ச் 15 ஆம் தேதி வெளியாகிறது

                                மார்ச்  15 ஆம் தேதி வெளியாகிறது
           விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி நடித்த  “ அர்ஜூன் ரெட்டி ”  

 மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர்A.N.பாலாஜி .

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின்  தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர்பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர். சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின் 'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்', பிரபாஸ்ஜூனியர் என்.டி.ஆர்நயன்தாரா படங்கள் மற்றும்  நாகார்ஜூனாவின் 10படங்கள்சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது  விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார். 


 













அந்த வரிசையில் மார்ச்  15ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டிபடம்.
 இது 'துவாரகாதெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் .
விஜய் தேவரகொண்டாவை வைத்து  சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஆந்திரா முழுக்க 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்ற படம்.

இதை தமிழுக்கு கொண்டு வருவது எங்கள் நிறுவனத்துக்கு பெருமை .

சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.அவருக்கு தென்னிந்தியா முழுவதும் இளம் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.விஜய சாந்தி,  சிரஞ்சீவிமகேஷ் பாபு  தொடங்கி நல்ல மொழிமாற்றுப் படங்களை தமிழ் ரசிகர்கள் வரவேற்று வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

எங்களது அர்ஜூன் ரெட்டி படமும் சூப்பர் குட் தயாரித்த  அனைத்து படங்களை போல இதுவும் அருமையான கதையம்சம் கொண்ட படம். ஐந்து சூப்பர் ஹிப் பாடல்கள் இந்த படத்தில் உள்ளன என்கிறார் A.N. பாலாஜி.

விஜய்தேவர்கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி  நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ்பாகுபலி பிரபாகர்முரளிசர்மாசுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  - ஸ்யாம் கே.நாய்டு / இசை  -  சாய்கார்த்திக் / பாடல்கள் -  நெல்லை பாரதி 
எடிட்டிங்  - பிரேம் /
தயாரிப்பு - A.N.பாலாஜி
வசனம் - ஆண்டனி ரிச்சர்ட் 
கதைதிரைக்கதைஇயக்கம் -  ஸ்ரீனிவாச ரவீந்திரா.

No comments:

Post a Comment