Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Wednesday, 20 February 2019

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி

இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியில் பங்குபெறும் ஆறு அணிகளில் ஒரு அணியாக சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி திகழ்கிறது. கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும்,  ஸ்ரீ  ப்ராகரசிவ் புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனமும் இந்த அணியின் இணை உரிமையாளராக இருக்கிறது. 

 ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த போட்டிக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அந்த ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதுகின்றன. இதில் சென்னையில் சார்பாக சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி விளையாடுகிறது.

சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மிகவும் திறமையான, இளமையான, அனுபவமிக்க வீரர்களை கொண்டிருக்கிறது. அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவில் இடம்பெற வைத்திருக்கிறது. இந்த அணிக்கான அதிகாரப்பூர்வ பாடலுக்கு இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருக்கிறார். இந்த அணிக்கான வீடியோ புரோமோ பாடலை ‘கீ ’படத்தின் இயக்குனரான காலிஸ் இயக்கியிருக்கிறார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.இந்நிலையில் தற்பொழுது அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியை உள்ளூர் ரசிகர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
சென்னை அணி எப்படி அரையிறுதி போட்டி வரை முன்னேறி வந்தது குறித்து விரிவாகக் காண்போம்.

சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, தன்னுடைய முதல் சுற்று 3 லீக் போட்டிகளை கொச்சியில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாடியது. முதல் போட்டியில் காலிகட் ஹீரோஸ் என்ற அணியுடனும், இரண்டாவதாக ஹைதராபாத்தை சேர்ந்த ப்ளாக்ஹாக்ஸ் என்ற அணியுடனும்,  பிறகு இறுதியாக கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் என்ற  அணியுடனும் மோதியது.  இதில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி,  ஹைதராபாத் ப்ளாக்ஹாக்ஸ் என்ற அணியுடன் விளையாடி, நான்குக்கு ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.  காலிகட் ஹீரோஸ் அணியுடன் 4 க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கிலும், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் இரண்டு மூன்று என்ற செட்களிலும் தோல்வியைக் கண்டது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இரண்டாவது சுற்று லீக் போட்டிகளில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி,  யு மும்பா வாலி என்ற அணியை சந்தித்தது.  வலிமையான அந்த அணியுடன் மோதும் போது உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் முதல் செட்டை வென்றது. இருந்தாலும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று செட்டுகளில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த ஆட்டம் இரண்டு மூன்று என்று செட் அளவில் சென்னை அணி தோல்வி கண்டது. அடுத்த நடைபெறும் லீக் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உருவானது. இதில் சென்னை அணி அகமதாபாத் டிபென்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் சென்னை அணி 4 க்கு 1 என்ற செட் அளவில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், சென்னைஸ்பார்ட்டன்ஸ் அணி நாளை நடைபெறும் அரை இறுதிப்போட்டியில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் கொச்சி அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெறுமா..? என்பது கைப்பந்து விளையாட்டு ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த போட்டியை பற்றிய கூடுதல் விபரங்களையும் டிக்கெட், அப்டேட்ஸ்,. ஸ்கோர், ஜெஸ்ஸி போன்ற விவரங்களை அறிந்து கொள்ள www.chennaispartans.co.in  என்ற இணையதள முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment