Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Monday, 25 February 2019

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் "கோடீஸ்வரி “
                              சாய் இளவரசன் இயக்குகிறார்



ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "கோடீஸ்வரி " என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்.    நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார்.
இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக காவல் துறை அதிகாரியாக ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த  எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.


கதாநாயகிகளாக் அஷ்மா சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.
கராத்தேராஜா, டி.பி கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக்  ஆகியோர் நடிக்கிறார்கள்.
தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் .கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன்  ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு  -    A.S.ராஜ்
இசை -  தாமஸ் ரத்னம்
எடிட்டிங்  -   ராம் நாத்
பாடல்கள் -   நந்தலாலா
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன்.
இவர்  ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், கலைமணி,  E.ராம்தாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment