Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Thursday, 28 February 2019

மக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

மக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

“நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” இது தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்கள் மனதிலும் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி

பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

 








அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக் கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்.. ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதை நாயகனாக மகேந்திரன் ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக கொண்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனாக புதிய தோற்றத்தில் நடித்திருக்க்கிறார். இப்படம் மகேந்திரனுக்கு திருப்புமுனையாக இருக்கும் என இயக்குனர் கூறுகிறார்.

அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் R.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன்,ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு ஜெ.ஆர்.கே,,  படத்தொகுப்பு கம்பம் மூர்த்தி கவனிக்க, தினா மற்றும் ரமேஷ் நடன இயக்குனராகவும், மிரட்டல் செல்வா ஸ்டண்ட் இயக்குனராகவும் பணி புரிந்துள்ளனர். பாடல்களை   ஜீவன் மயில், மோகன்ராஜ் எழுத, விஜய் டி.வி. புகழ் செந்தில்கணேஷ்,  ராஜ லெட்சுமி மற்றும் ஆத்தங்குடி இளையராஜா, சித்தின், நமீதா இவர்களுடன் சேர்ந்து தேனிசைத் தென்றல் தேவாவும் பாடல்களைப் பாட, ஸ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார். 

ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் இப்படத்தை பூக்கடை G.சேட்டு தயாரித்துள்ளார்.
உங்கள் மேலான அன்பையும் 
ஆதரவையும் தொடர்ந்து விரும்பும்...

No comments:

Post a Comment