Featured post

மேடை நடன கலைஞர்கள் தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை!

 மேடை நடன கலைஞர்கள்  தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை! திரை நட்சத்திரங்களின் 'ஸ்டார் நைட் ஷோ' தலைமையேற்க முதல்வருக்கு அழைப்ப...

Thursday 28 February 2019

சசிகுமாரின் "சுப்ரமணியபுரம்" திரைப்படத்தை காண இருக்கும் பாலிவுட் இயக்குனர்

பாலிவுட் திரையுலகின் முன்னணி  இயக்குனரான அனுராக் காஷ்யப் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில்  அறிமுகம் ஆனார். இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் என்ற படத்தை 2 பாகங்களாக இயக்கினார். அது மாபெரும் வெற்றி அடைந்தது .இந்த படத்தை இவர் இயக்க  காரணம் தமிழில் 2008ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படம்தான். அந்த படத்தால் ஈர்க்கப்பட்ட இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் படத்தை இயக்கியுள்ளார் என தெரிவித்திருந்தார்.

தற்போது  சுப்ரமணியபுரம்  படம்  மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள குளோபஸ் மாலில் நாளை மாலை 7.30 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட இருக்கிறது. இந்த சிறப்பு காட்சியை இயக்குனர் அனுராக் காஷ்யப்  காண இருக்கிறார்


No comments:

Post a Comment