Featured post

Actress Saanya Iyer Scripts Success: Crowned SIIMA Most Promising Newcomer

 *Actress Saanya Iyer Scripts Success: Crowned SIIMA Most Promising Newcomer* Rising star Saanya Iyer embodies a rare blend of youthful bril...

Thursday, 12 March 2020

'பேய் இருக்க பயமேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்

'பேய் இருக்க பயமேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி..!

திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் 'பேய் இருக்க பயமேன்'. இப்படத்திற்கு இசை ஜோஸ் ஃபிராங்க்லின்.  ஒளிப்பதிவு அபிமன்யு, படத்தொகுப்பு ஜிபி கார்த்திக்ராஜா கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கார்த்தீஸ்வரன் .






இப்படத்தைப் பற்றி இயக்குனர்  கூறுகையில்,

இப்படம் பிளாக் காமெடி வகையைச் சார்ந்தது.  பேயை பார்த்து யாரும் பயப்பட கூடாது. அது நம்முடைய  அடுத்த பரிமாணம் என்பதை மையக்கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த பேய் இருக்க பயமேன்.

இப்படம் குழந்தைகளை பெரிதும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன.
இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பாளராக பாய்ஸ், ராவணன், மங்காத்தா, காஞ்சனா போன்ற வெற்றி படங்களில் பணியாற்றிய C.சேது பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் மூணாறு மற்றும் மறையூர் காட்டுப்பகுதியில்  படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நானே நடித்துள்ளேன். கதாநாயகியாக காயத்ரி ரெமா அய்யர் நடித்துள்ளார்.  முக்கிய கதாபாத்திரத்தில் முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நெடுநல்வாடை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஸ் பிராங்கிளின்  இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

No comments:

Post a Comment