Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Monday 23 March 2020

சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மையம்

சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மையம் “கொரானா வைரஸை“ கட்டுக்குள் கொண்டு வர தீவிர வழிகளை 

மேற்கொள்ள சர்வதேச சுகாதார மையத்துக்கு கோரிக்கை நிறுவனர், தலைவர் கோபிகாந்தி தகவல்.



நாமக்கல், மார்ச் - 20, சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் உலக சுகாதார நிறுவனனததுக்கு கொரானா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தீவிர வழிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கைச் செய்தியில் கூறியுள்ளதாவது, “கொரானா வைரஸ்” தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை 
கொடுமைப்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் உலகம் முழுவதும் அன்றாட வாழ்க்கையையே பாதித்து முடங்கியது போல் உள்ளார்கள். அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கே தடுமாற்றம் ஏற்படும் அளவிற்கு “கொரானோ வைரஸ்” பரவுவதை காட்டிலும் வேகமாக 
வதந்திகளும் பரவி வருவது மிக மிக வேதனைக்குரிய விஷயமாகும். உலகம் முழுவதும் உள்ள அந்தந்த நாட்டின் மற்றும் மாநிலங்களின் அரசாங்கங்களும் இதை முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் ஊடகங்கள் 
மக்களிடம் பயம் ஏற்படுத்தாமல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இதனால் உலகம் முழுவதும் அனைத்து பணிகளும் முடக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து உலக மக்கள் ஒவ்வொருவரும் முதலில் மன 
தைரியத்தை பலப்படுத்தினாலே எந்த வைரசும் நம்மை தாக்காது. சுத்தத்தையும், சுகாதாரத்தையும் ஒவ்வொரு நிமிஷமும் கடைப்பிடிக்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் அளவிற்கு உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்து வகை உணவுகளான பால், பழத்தின் சாறுகளை எதையும் சேர்க்காமல் குடிக்க வேண்டும். வேப்பமர கொழுந்து இலைகளை வெறும் வயிற்றில் நன்றாக மென்று விழுங்கி தண்ணீர் குடித்தால் உடலில் வரக்கூடிய அனைத்து  வைரஸ்களையும் அழித்து விடும். அனைத்து தரப்பு மக்களும் வேப்ப இலைகளை 
உட்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பாக்கெட் உணவுகளையும், பாக்கெட் உணவுகள் அனைத்தையும் கட்டாயம் தவிர்த்தாலே நோய் 
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர் சாதன இயந்திரங்களை தவிர்த்தல் , இயற்கை காற்றை அதிகம் சுவாசித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் காலை, மாலை இருவேளை குளித்து 

உடைகளை மாற்றினாலே எந்த வைரசும் நமது பக்கமே வராது. சுகாதாரமான உணவுகளை சுத்தமாக செய்து உட்கொண்டாலே உடலில் எந்தவித நோய்க் கிருமிகளும் எளிதில் நம்மை தாக்காது. இதை உலக மக்கள் 
ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து கொரானோ வைரஸை அழிக்க இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் போதுமானது. அதை விடுத்து மக்களை சிறைக் கைதிகளாக்குவது 
நடவடிக்கையினால் கொரானோ வைரஸை கட்டுப்படுத்த முடியாது. இவ்விதிமுறைகள் அனைத்து தொழில்களையும்முடக்கும். வேலை வாய்ப்பை அழிக்கும். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி மக்களை கொள்ளும். இதை 
அனைத்து நாட்டின் அரசாங்கங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். கொரானோ வைரஸை விரைவில் அழிக்க உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் இது போன்ற வழிமுறைகளை செயல்படுத்த அறிவுறுத்தியும் 
இவ்வைரஸை அழிக்க மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களை அழைத்து அவர்களுக்கு அனைத்து வழிவகை செய்து கொடுத்தால் உடனடியாக மருந்தை கண்டுபிடிப்பார்கள். இவ்வாறு சர்வதேச சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் 
கோபி காந்தி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment