Featured post

Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th

 Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th Censored with U/A Certificate | Winner of Multiple Prestigious Intern...

Sunday, 8 March 2020

சந்தீப் கிசன் - ரெஜினா கசான்ட்ரா நடிக்கும்

சந்தீப் கிசன்  - ரெஜினா கசான்ட்ரா நடிக்கும்    " அசுரவம்சம் "

லட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக A.வெங்கட்ராவ் மற்றும் S பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக  சேலம் B.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " அசுரவம்சம் "

2018 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற " நட்சத்திரம்  " படத்தின் தமிழாக்கமே இந்த          
 " அசுரவம்சம் "

இந்த படத்தில் சந்தீப் கிசன் கதாநாயகனாக நடித்துள்ளார், கதாநாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா சாய் தருண் தேஜ், பிரகயா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  - ஸ்ரீகாந்த் நரோஜ்
இசை - பிம்ஸ் சிசிரோலேயோ பாடல்கள்  -  முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன், ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம், பழமொழி பாலன், எழிலன்பன்










































எடிட்டிங்  - சிவா Y பிரசாத் 
நடனம்  - ஸ்ரீதர்
இயக்கம் - கிருஷ்ண வம்சி
வசனம் - A.R.K.ராஜராஜா

மிக அழுத்தமான கதை அம்சத்தோடு உள்ள ஒரு போலீஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்பவர்களுக்கு நல்ல விருந்தாக ஒரு போலீஸ் படம் தான் இந்த " அசுரவம்சம் " கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிசனுக்கு  போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிசன்  காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறான். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமானப் பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷ்னர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷ்னர் மகனை எப்படி டீல் செய்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ஹீரோ எதிர்கொள்கிறான் என்பதும் தான் இந்தப்படத்தின் பரபரப்பான  திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

 படத்தின் இன்னொரு எனர்ஜி பாயிண்டும் இருக்கிறது. இதே சமூக விரோதிகளின் கேஸை எடுத்து நடத்தி இறந்து போன காவல் அதிகாரி அலெக்சாண்டரின் ட்ரஸோடு ஹீரோ வேட்டையாடுவது படத்தின் அதகள ஏரியா என்கிறார்கள்.

 இந்தப்படத்தில் பாடல்கள் மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. கவிஞர் சே வரலெட்சுமி  மிகச்சிறப்பான பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். கவிஞர் முருகானந்தம், கவிஞர் வலங்கைமான் முகதீன், பழமொழி பாலன், கவிஞர் சங்கர் நீதி மாணிக்கம், கவிஞர் எழிலன்பன் ஆகியோரும் தங்களின் பாடல் வரிகளால் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளார்கள்.

No comments:

Post a Comment