தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் எனும் பாடல் மூலம் தமிழ் திரை உலகத்தையே மயங்க வைத்தவர், திரும்பி பார்க்க வைத்தவர், பலமுறை இந்தப் பாடலை விரும்பி கேட்க வைத்தவர்.
இசை உலகத்தின் இசைவாணி,
இந்திய திரையுலகத்தின் கலைவேணி, பாடகி வாணி ஜெயராம் அவர்களுடைய மறைவு என் மனதுக்கு அதிர்ச்சி அளித்தது.
அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
இப்படிக்கு,
இசை அமைப்பாளர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கத்தின் கௌரவ ஆலோசகர் - டி ராஜேந்தர் எம்.ஏ.,
No comments:
Post a Comment