Featured post

இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை

 *இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம்* இயக்குநர் பாலா இயக்கத்தில் ...

Wednesday 8 March 2023

ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஸ்தபதி டாக்டர் ஆர்

*ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஸ்தபதி டாக்டர்  ஆர் . பிரபாகரின் தயாரிப்பில் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இயக்குந‌ராக அறிமுகம் ஆகும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது*கும்பகோணம் அருகில் தாராசுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும் ஸ்தபதி டாக்டர் ஆர்  பிரபாகர்  தயாரிப்பில் உருவாகும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.  


பவுடர் திரைப்படத்தின் இயக்குந‌ர் விஜய் ஸ்ரீஜியிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குந‌ராக அறிமுகம் ஆகிறார். காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூடியூபர்களான ரவி விஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கும்  இப்படத்தில் சிங்கம்புலி ,  குக் வித் கோமாளி புகழ் சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 


ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் சார்பில் கும்பகோணத்தை சேர்ந்த உலக புகழ் பெற்ற ஸ்தபதி ரோட்டேரியன் டாக்டர்  பிரபாகரின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகிறது. திருமதி துர்கா தேவி பாண்டியன்  இணைத் தயாரிப்பாளராக உள்ளார். 


பிரஹத்  முனியசாமியின் ஒளிப்பதிவு செய்கிறார், தயாரிப்பு மேற்பார்வையாளராக நமஸ்காரம் சரவணன் பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தின் கலை இயக்குந‌ர் நந்தகுமார் ஆவார். நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பை பாண்டியன் கவனிக்கிறார். படத்தொகுப்பை குணா கவனிக்க, ஹரி எஸ் ஆர் இசை அமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார். 


இத்திரைப்படம் குறித்து அறிமுக இயக்குந‌ர் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில்: "இது ஒரு ரொமான்டிக் காமெடியாக,  எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்," என்றார். கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது என்றும்,  அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 


இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் என்றும் சேதுவுக்கு பின் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.


***


*Shooting for 'Christina Kathirvelan', a rom-com thriller story produced by Dr R Prabhakar and directed by SJ Alex Pandian starts with pooja*


Dr. R Prabhakar an eminent sculptor from Kumbakonam proudly presents his maiden production, titled 'Christina Kathirvelan' under the banner Shri Lakshmi Thirai Kalai Koodam. The film will be directed by debutant SJ Alex Pandian. 


Shooting of the film 'Christina Kathirvelan' commenced with Pooja at Dharasuram Kamakshi Amman temple, Kumbakonam. Kaushik Ram who did lead role in the movie kalangalil Aval Vasantham is the hero of this movie. 

Popular YouTubers Ravi VJ and Bhuvaneswari are doing important characters in this movie. Singam Puli, Cook with Comali fame Silmisham Shiva, Ajith Unique and TSR are also playing vital roles.


Cinematography will be done by Prahath Muniasamy. Art Director is Nandakumar. Namaskaram Saravanan is the Production Manager of this movie. Nikkil Murukan is doing the public relations work for this film. Smt. Durga Devi Pandian and Pandian are Co-Producer and Executive Producer of this movie, respectively. Editor is Guna, while music is by Hari S R.


Debutant Director SJ Alex Pandian had previously worked as Associate Director in the movie Powder, directed by Vijay Shri G who earlier made the movie Dhadha 87 and presently directing 'Silver Jubilee Star' Mohan for the film Haraa.


Speaking about his movie Christina Kathirvelan, the debutant director SJ Alex Pandian says, Christina Kathirvelan is a romantic comedy thriller with a social message. The problems faced by the hero who comes to the city from the village for his college education, is dealt with twists in the movie. 


The story is based on the true incidents, Alex Pandian said ad added that they are planning for the shooting in areas in and around Kumbakonam. He also said that after Sethu, Christina Kathirvelan shooting is going to be held at Kumbakonam Government College.

No comments:

Post a Comment