Featured post

Actor Karthi honours the Agricultural Community

 *Actor Karthi honours the Agricultural Community!* *Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture.* *Ac...

Thursday, 7 September 2023

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள்

 *ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம்*



ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மும்பையில் ரசிகர்கள் பட்டாசு, மத்தளங்களுடன் உற்சாகத்துடன் கொண்டாடினர். 


'ஜவான்' திரைப்படம் வசூல் ரீதியான வெற்றி படம் என பார்வையாளர்கள் விமர்சனம்!


காலை 6 மணிக்கு தொடங்கிய சிறப்புக் காட்சிகள் பார்வையாளர்களால் பெரிய கொண்டாட்டங்களாக மாறியது.


தேசம் முழுவதும் ஷாருக் கானின் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் இறுதியாக இன்று திரையிடப்பட்டிருக்கிறது. திரையரங்குகளை மைதானமாக மாற்றியிருக்கும் ஜவானின் அதிர்வலை... அடுத்தடுத்த திரையரங்குகளில் நன்றாகவே தெரிகிறது. ஆக்சன் என்டர்டெய்னருக்கான ரசிகர்கள் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கெயிட்டி- கேலக்ஸி திரையரங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நன்றாகவே காணப்படுகிறது. அங்கும் அதிகாலை காட்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர். 


மும்பையில் உள்ள கெயிட்டி -கேலக்ஸி திரையரங்கிலும்.. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மற்ற திரையரங்குகளிலும் அதிகாலை ஆறு மணிக்கு திரையிடப்பட்ட 'ஜவான்' சிறப்பு காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். 'ஜவான்' திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பெரிய அளவில் தங்களின் செல்போன் ஒளியை ஒளிர விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வருகை தந்திருந்த கூட்டத்தினர் ஷாருக்கான் மற்றும் ஜவான் படத்தை பாராட்டினர். மேலும் அந்த திரையரங்கத்திற்கு வெளியே மிகப் பெரிய அளவில் கட்-அவுட் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இப்போது முதல் தொடங்கியிருக்கும் ஜவானின் மாயாஜாலத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு படத்திற்காக இப்படி ஒரு செயலை.. ரசிகர்கள் செய்வது இதுவே முதல்முறை. மேலும் திரையரங்கிலிருந்து காட்சிகளை பகிரும் போது ரசிகர்கள் சமூக ஊடகங்களையும் புயல் போல் தாக்கினர்.


https://twitter.com/chalofir/status/1699588597530390649?s=20


https://www.instagram.com/reel/Cw3z5b8IouG/?igshid=MzRlODBiNWFlZA==


https://www.instagram.com/reel/Cw30aZSo3w8/?igshid=MzRlODBiNWFlZA==


https://twitter.com/TheStarThings/status/1699590680572797351?s=20


https://x.com/srkuniverse/status/1699571173204303977?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg


https://twitter.com/MonodipBasak/status/1699578131114573999?s=20


https://twitter.com/yagaa__/status/1699577699944235278?s=20


https://twitter.com/MonodipBasak/status/1699578131114573999?s=20


https://twitter.com/SRKUniverse/status/1699577788854911157?s=20


https://twitter.com/lovelybaba9999/status/1699577624429998525?s=20


https://twitter.com/iamAKN/status/1699579365439238448?s=20


https://twitter.com/TeamSRKWarriors/status/1699591230068568484?t=bpio2AhHe-6JO3SUGQy5Hw&s=19



ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

No comments:

Post a Comment