Featured post

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!  ஜெ...

Sunday, 8 September 2024

திரை நட்சத்திரங்களின் பாராட்டு மழையில்,

 திரை நட்சத்திரங்களின் பாராட்டு மழையில், குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி!












அப்பா மீடியா  தயாரித்துள்ள "எங்க அப்பா" மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18'ம் தேதி வெளியாகிறது!


இதில் ஐந்து வயது குழந்தை லக்‌ஷனா ரிஷி கதையின் நாயகியாக நடித்துள்ளார்.


தனது தந்தையை இறைவனாக நினைத்து, குழந்தை பாடும் பாடல் இதில் ஹை லைட்.


பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலருக்கு 'எங்க அப்பா' ஆல்பம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை 'வருங்கால கதாநாயகி' என பாராட்டி, வாழ்த்தினார்கள்!


எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனீஷா சதீஷ்!


கேரளா மற்றும் தமிழகத்தின் கண்கவரும் அழகிய காட்சிகளோடு, "எங்க அப்பா" செப்டம்பர் 18'ம் தேதி வருகிறார்!


@GovindarajPro

No comments:

Post a Comment