Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Wednesday, 9 October 2024

ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும்,

 *ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!*




நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சில  கிரிமினல் சம்பவங்களின் பின்னணியில், எமோஷனல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது 'யாத்ரீகன்'. தனலட்சுமி கோபாலன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் மாளவிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ஆர்எம்பி புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் கூறும்போது, ​​“நாங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்தபோது, ​​நல்ல தரமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இயக்குநர் பிரேம் நசீர் 'யாத்ரீகன்' கதையை சொன்னபோது நாங்கள் எதிர்பார்த்தபடியே இருந்தது. மேலும் அவர் இயக்குநர்கள் சீனு ராமசாமி, முத்தையா மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களிடம் பணி புரிந்தவர். நல்ல தரமான திரைப்படங்களை இயக்கி, உறுதியளித்தபடி சரியான நேரத்தில் இறுதி வெளியீட்டை கொடுப்பதில் இந்த இயக்குநர்கள் பெயர் பெற்றவர்கள். பிரேமுடன் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் 'யாத்ரீகன்' எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்கும்" என்றார். 


இயக்குநர் பிரேம் நசீர் பேசுகையில், “தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி மற்றும் ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு படத்தை இயக்க என்னைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. 'யாத்ரீகன்' திரைப்படம் ஒரு travel vlog அடிப்படையிலான திரைப்படம். இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றியது. ஒரு மர்மமான நிகழ்வு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு பிணைக்கிறது என்பது படத்தின் மையக்கரு. இந்தக் கதையின் நாயகன் துறுதுறுவென எனர்ஜியுடன் தேவை எனும்போது பிக் பாஸ்  தர்ஷன் அதற்கு சரியான தேர்வாக இருந்தார். ஏனெனில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடிக்கிறார். சமீபகாலங்களில் நடிகர் காளி வெங்கட் தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரம் மூலம் அந்தப் படத்தை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார். என்னைப் போன்ற ஆர்வமுள்ள இயக்குநர்கள் அவருக்கான கதைகளை எழுதத் தொடங்கியதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் நடிகர் நாசர் சார் போன்ற பன்முகம் கொண்ட நடிகராகப் போகிறார். அவர் இந்தப் படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார். 


தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 


*நடிகர்கள்:* தர்ஷன், மாளவிகா, காளி வெங்கட், ப்ராங்க்ஸ்டர் ராகுல், பானு


*தொழில்நுட்ப குழு* 


நிறுவனம் - ராஜம்மாள் மீடியா பிக்சர்,

தயாரிப்பாளர் - வி.ஜி.தனலட்சுமி கோபாலன்,

இயக்குநர் - பிரேம் நசீர்,

ஒளிப்பதிவு - சந்தானம் சேகர்,

எடிட்டர் - சி எஸ்.பிரேம்,

கலை - பாபு, 

இசை - அபிஷேக், 

படங்கள் - முருகன்,

ஆடை வடிவமைப்பாளர் - முத்துநாகை,

மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

No comments:

Post a Comment