Featured post

நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

 நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபி...

Tuesday, 8 October 2024

பிரபல தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின்

 *பிரபல தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட கூடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்!* 












டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள்  சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துக்கொண்டு டாக்டர். ஐசரி கே கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு, பா.ம.க தலைவர் திரு.அன்புமணி ராம்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தயாரிப்பாளர் தானு, இசையமைப்பாளரும் நடிகருமான திரு விஜய் ஆண்டனி, நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், பிரபு தேவா, ஜெயம் ரவி, ஜீவா,விஷ்னுவிஷால், ஆர்யா,  இயக்குநர்கள், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி, ஆர்.கே.செல்வமணி, மாரிசெல்வராஜ், விக்னேஷ் சிவன், ஏ.எல்.விஜய்,  நடிகைகள் ராதிகா, மீனா, சங்கீதா மற்றும்  பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஐசரி கணேஷ் நன்றி தெரிவித்தார், “உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி.  

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் இந்த சமூகத்திற்கு நான் இன்னும் அதிக நல்லது செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்குக் கொடுக்கிறது. அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி” எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment