Featured post

Diesel Movie Review

Diesel Review  #Diesel ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம diesal படத்தோட review அ தான் பாக்க போறோம். shanmugam  muthusamy தான் இந்த படத்தோட கதையை எழ...

Tuesday, 1 October 2024

நேசிப்பாயா' படத்தின் டீசருக்கு விமன் கிறிஸ்டியன் காலேஜில்

 *'நேசிப்பாயா' படத்தின் டீசருக்கு விமன் கிறிஸ்டியன் காலேஜில் (WCC) கிடைத்த அமோக வரவேற்பு நடிகர் ஆகாஷ் முரளி மற்றும் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!* 






மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில் சென்னையில் உள்ள விமன் கிறிஸ்டியன் காலேஜிற்கு படக்குழு சென்றபோது அங்குள்ள மாணவிகள் படக்குழுவினருக்கும் படத்தின் டீசருக்கும் அமோக வரவேற்புக் கொடுத்தனர். 


இந்த உற்சாக வரவேற்பு படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் ஆகாஷ் முரளியுடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆகாஷ் முரளியின் மனைவியுமான சினேகா பிரிட்டோவும் கலந்து கொண்டனர். 


எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் டாக்டர் எஸ். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான படம் ‘நேசிப்பாயா’. ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் ஆர். சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பிலும், கேமரூன் எரிக் பிரிசன் ஒளிப்பதிவிலும் இந்த படம் காட்சி மற்றும் இசை விருந்தை பார்வையாளர்களுக்குத் தரும் என படக்குழு உறுதியளித்துள்ளது.  


படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த விவரங்களை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள்!

No comments:

Post a Comment