Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Monday, 10 February 2025

YSS/SRF தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த

 YSS/SRF தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி வழங்கிய அகவெழுச்சியூட்டும் ஆன்மீக சொற்பொழிவு 




யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா /ஸெல்ஃப் ரியலைசேஷன் பெல்லோஷிப் (YSS/SRF) இன் தலைவரும் ஆன்மீக  முதல்வருமான சுவாமி சிதானந்த கிரி அவர்கள்   ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், திருவான்மியூர், சென்னையில், கூடியிருந்த பலவகைப்பட்ட சுமார் 1300  பார்வையாளர்கள் முன்னிலையில் ஆன்மீகம் மற்றும் கிரியா யோகா பற்றிய அகவெழுச்சியூட்டும் ஓர் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். 


 சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருந்த சாதனாலயாவை YSS - ன் புதிய ஆசிரமமாக  அவர் செப்டம்பர் 15, 2024  அறிவித்ததை குறிப்பிட்டார். 


சுவாமி சிதானந்த கிரி கிரியா யோகா பற்றி ஆழ்ந்த அறிவினை பகிர்ந்தார். 



"கிரியா யோக சாதனா என்பது குருவின் முடிவற்ற அருளாசிகள், குருவின் போதனைகள், அப்போதனைகளைப் வாழ்க்கைக் கலையாக பயிற்சி செய்யும் பக்தர்களின் சமூகம் ஆகியவற்றை கொண்டது"  என்று குறிப்பிட்ட அவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய கிரியா யோகம் மற்றும் அவரது மற்ற போதனைகளைப் பரப்புவதில் தமது அமைப்பிற்கு உள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். 


இதற்கு முன்பாக காலையில் கூடியிருந்த 1000 பக்தர்களுக்கு சிறப்பு 3மணிநேர தியானத்தை வழிநடத்தினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 


இவ்விழாவில் அவர், பக்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த "Holy Science" என்ற  புத்தகத்தின் தமிழாக்கத்தை "கைவல்ய தரிசனம்" என்ற பெயரிலும், "Metaphysical Meditation" என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை  "பரதத்துவ தியானங்கள்" என்ற பெயரிலும் வெளியிட்டார். 


மிகச் சிறப்பாக விற்பனையாகும் “ஒரு யோகியின் சுயசரிதம்” புத்தகத்தை எழுதியவரும், உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டவருமான ஆன்மீக ஆசானான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்த�

No comments:

Post a Comment