கபளிஹரம் கதாநாயகன் தக்ஷன் விஜய், முருகா அசோக் உடன் இணைந்து, கதாநாயகர்களாக நடிக்கும் படம் "I AM WAITING".
மகிழ் புரொடக்சன்ஸ் C.பியூலா தயாரிப்பில், N.P.இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகிறது "I AM WAITING".
கசாப்பு கடை நடத்தி வரும் ஏழை குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கையை மையமாக வைத்து ஆக்ஷனுடன் உருவாகியுள்ள படம் "I AM WAITING".
ஹாலிவுட்டுக்கு இணையான சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஆக்ஷன் ஹீரோ தக்ஷன் விஜய்!
அசோக், தக்ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
N.P.இஸ்மாயில் இயக்கி உள்ளார். A.R.ரகுமான் சகோதரி A.R.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு K.K.சாதிக், எடிட்டிங் ராமர், கலை கார்த்திக், சீனு, சண்டை பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரிக்கிறார் C.பியூலா மகிழ்.
படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது!
"I AM WAITING" என ரசிகர்கள் எதிர்பார்க்க, விரைவில் திரைக்கு வருகிறது!
@GovindarajPro
No comments:
Post a Comment