Featured post

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர்

 *துருவ் விக்ரம் நடிக்கும்,  “பைசன் காளமடான்”  திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!* இயக்குநர் மார...

Tuesday, 6 May 2025

காந்தா' படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத்

 *'காந்தா' படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!*



நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் 'காந்தா' திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள இருவரின் முதல் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.


சமீபத்தில், படக்குழு நடிகர் சமுத்திரக்கனியின் பவர்ஃபுல்லான கதாப்பாத்திர தோற்றத்தை வெளியிட்டது.


இன்று படக்குழு அழகு மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் திறமையான நடிகை பாக்கியஸ்ரீ போர்சேவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வசீகரிக்கும் புன்னகையுடன் கார் ஜன்னலை எட்டிப்பார்த்தபடி அவர் அந்த போஸ்டரில் இருக்கிறார். அவரது வசீகரிக்கும் பார்வை கவிதைத்துவமாக அமைந்துள்ளது. 


1950களின் மெட்ராஸின் பரபரப்பான தெருக்களோடு செட் அமைக்கப்பட்டு  'காந்தா' படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ராணா டகுபதி தலைமையிலான ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.


இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கும் இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment