Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Monday, 5 May 2025

துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும், "ஐ அம் கேம்" படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

 *துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும்,   "ஐ அம் கேம்" படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது*






Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான "ஐ அம் கேம்" படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்படப்  படக்குழுவினர்  கலந்துகொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 



“RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும்  இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.


தமிழின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஆணட்னி வர்கீஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். மேலும் பிளாக்பஸ்டர் “RDX” படத்தைத் தந்த  நஹாஸ் ஹிதாயத் இயக்குவது இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்டமான படைப்பாக, நட்சத்திர நடிகர்களுடன் இப்படம் தயாராகி வருகிறது. தனித்துவமான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஐ ஆம் கேம்' படத்தின் டைட்டில் போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொழில் நுட்ப குழு விபரம்

ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித் 

இசை – ஜேக்ஸ் பெஜாய்

படத்தொகுப்பு – சமன் சாக்கோ

தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சல்லிசேரி 

ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்

ஆடை – மாஷர் ஹம்சா

புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்

இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,

வி.எக்ஸ்.சி.குமார்

பாடல் வரிகள். தௌஃபீக் (எக்வொயிட்) 

போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்

சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா 

சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்

ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே

No comments:

Post a Comment