Featured post

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போ...

Tuesday, 6 May 2025

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

R. K. வித்யாதரன்


Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் " ஸ்கூல் "










இந்த படத்தில் யோகிபாபு,பூமிகா சாவ்லா,கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள்.


இந்த படத்தின் இயக்குனர் 

R. K. வித்யாதரன் யோகி பாபு பற்றி பகிர்ந்தவை....


சமீபத்தில் நடந்த யோகி பாபு நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்று மேடையிலேயே படு மோசமாக விமர்சித்துள்ளனர்.


என்னை பொறுத்தவரை அவர் அப்படி செய்ய கூடிய நடிகர் கிடையாது. முறையாக அவரிடம் பேசி தேதி, நேரம் வாங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக கலந்துகொள்வார்.


ஸ்கூல் படம் துவங்கியது முதல் இன்றுவரை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். பட பூஜை நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா என எல்லா பிரமோஷன்களுக்கும் வருகை தந்துள்ளார். 


அவர் சினிமாவை நேசிக்கும் நல்ல மனிதர் என்பதால் இத்தனை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார் இயக்குனர் R. K. வித்யாதரன்.


ஸ்கூல் படம் கோடை கொண்டாடமாக இம்மாதம் 23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment