Retro Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம retro படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை karthik subburaj தான் இயக்கி இருக்காரு. இந்த படத்துல pooja hegde , jayaram , joju george , karunakaran , nasar , prakash raj , singampuli னு பலர் நடிச்சிருக்காங்க.
Retro Movie Video Review: https://www.youtube.com/watch?v=7xa2Imes2X0
இந்த படம் சூர்யா ஓட 44 வது படம். என்னதான் surya ஓட படமான kanguva க்கு mixed review மக்கள் கிட்ட இருந்து கிடைச்சாலும், இந்த படம் எப்படி இருக்கும் னு நெறய பேரு expectation ஓட காத்துகிட்டு இருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துல இருந்து வந்த kanima song social media ல viral அ போயிடு இருக்கு. சோ வாங்க இன்னிக்கு release ஆனா retro படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
paarivel kannan அ நடிச்சிருக்க surya ஒரு gangster அ இருக்காரு. இவரோட wife rukmini அ நடிச்சிருக்க pooja hegde கிட்ட அடிதடி க்கு லாம் போக மாட்டேன் னு promise பண்ணி அமைதியா life அ lead பண்ணிட்டுருக்காரு. கடைசில இவரோட பழைய பகை ஒன்னு தொறத்திட்டு வருது, அதுல இருந்து இவரோட wife அ காப்பாத்தி ஆகணும். அது என்ன பிரச்சனை ? தன்னோட wife அ காப்பாத்துறாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
suriya ஓட நடிப்பு தான் பிரமாதமா இருந்தது. past and present னு ரெண்டு விதமான getup ல வர்ரது பக்கவா இருந்தது. ஒரு பக்கம் இந்த அடிதடிய விட்டு வெளில வந்து நிம்மதியா இருக்கணும் ன்ற ஆசை இன்னொரு பக்கம் பழைய பகையை ஒழிக்கணும் ன்ற வெறி னு ரொம்ப அழகா balance பண்ணி நடிச்சிருக்காரு. pooja hegde இந்த படத்துல ரொம்ப natural அ இருக்காங்க. இவங்க நடிப்பும் ரொம்ப எதார்த்தமா surya க்கு ஈடு குடுத்து நடிச்சிருக்காங்க. இவங்க நடிச்ச படங்களை இந்த படம் best னு சொல்லலம். மத்த supporting actors அ நடிச்சிருக்க Jayaram, Joju George, Prakash Raj, and Nassar,ஓட portions லாம் அட்டகாசமா இருந்தது.
karthik subburaj ஓட direction செமயா இருந்தது. ஒரு emotional ஆனா கதைக்களம் அதோட super அ chereograph பண்ண action sequences னு mass ஆன படத்தை audience க்கு குடுத்திருக்காங்க. shreyas krishna ஓட cinematography இந்த படத்தை retro அ look அ இருக்கட்டும் present look அ இருக்கட்டும் ரெண்டுமே super அ camera ல பதிவு பண்ணிருக்காரு. visuals எல்லாமே ரொம்ப colourful அ இருந்தது. sandhosh narayanan ஓட music அ பத்தி சொல்லவே வேண்டாம். அவரோட music and bgm இந்த படத்தை இன்னொரு level க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும்.
action ஒரு பக்கம் emotions ஒரு பக்கம் னு super ஆனா balance வந்திருக்கு retro . ஒரு energetic ஆனா surya வை இந்த படத்துல பாக்க முடியுது னு சொல்லலாம். surya ஓட career ல இந்த படம் முக்கியமானதா இருக்கும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. must watch னு தான் சொல்லவேன். இந்த படத்தோட visuals , action scenes , bgm க்காகவே theatre ல போய் பாக்குறதுக்கு சூப்பரா இருக்கும். கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment