Featured post

The Girl Friend Movie Review

The Girl Friend Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the girlfriend படத்தோட review அ தான் பாக்க போறோம். Rashmika Mandanna, Dheekshith Sh...

Friday, 7 November 2025

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு*

 *இந்தியன் பனோரமாவுக்கு 

இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை*  குறும்படம் தேர்வு*


 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா - இந்தியன் பனோரமா,வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. 


 இதில் 

இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் 

(Official Selection) தேர்வாகி இருக்கிறது.


இப்படம் பற்றி இயக்குனர்  

இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது 


  உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு  எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 


 பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த *ஆநிரை*


 இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும்  என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த  நடுவர்களுக்கு நன்றி


 இவ்வாறு

 இ.வி.கணேஷ்பாபு கூறினார்.


 ஏற்கனவே

 இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படத்திற்காக *தேசிய விருது* பெற்ற, *ஸ்ரீகாந்த்தேவா* இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

 அர்ச்சுனன் மாரியப்பன்,  அஞ்சனாதமிழ்ச்செல்வி,மீரா, கௌரிசங்கர், காமாட்சிசுந்தரம்,

இ.வி.கணேஷ்பாபு மற்றும் பலர் நடித்த இந்த குறும்படத்திற்கு  ஒளிப்பதிவு

 p.செல்லத்துரை, படத்தொகுப்பு T.பன்னீர்செல்வம், ஆடியோகிராபி  UKI ஐயப்பன் செய்துள்ளனர்.

 ஞானி கிரியேஷன்ஸ் ஜெயந்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.

No comments:

Post a Comment