Featured post

மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத்

 மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட்  பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!  1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெ...

Friday, 14 November 2025

பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ் வழங்கும் ஓடிடியில் பெரும் வரவேற்பு பெற்ற

 *பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ் வழங்கும் ஓடிடியில் பெரும் வரவேற்பு பெற்ற 'என்னங்க சார் உங்க சட்டம்' படம் இயக்கிய இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், அருள்நிதி- மம்தா மோகன்தாஸ் நடிக்கும் 'மை டியர் சிஸ்டர்' அறிவிப்பும் ஃபன்னான விஷூவல் புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!*



வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த மற்றும் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்ளும் பல கதைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. 


'பாசமலர்' படத்தில் ஆரம்பித்து 1990-களில் வெளியான 'கிழக்கு சீமையிலே', பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'வேதாளம்' எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது. 


அந்த வகையில், 'மை டியர் சிஸ்டர்' என்ற உணர்வுப்பூர்வமான கதையை வழங்குகிறது பேஷன் ஸ்டுடியோஸ். கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், மனிஷ் ஷாவுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 'என்னங்க சார் உங்க சட்டம்' என்ற தன் அறிமுக படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்ற பிரபு ஜெயராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மம்தா மோகன்தாஸ் இருவரும் அண்ணன்- தங்கை கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர். 


'பைசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'மை டியர் சிஸ்டர்' படத்தில் இசை ரசிகர்களுக்குப் பிடித்த ஏழு பாடல்களை இயற்றி இருக்கிறார் நிவாஸ் பிரசன்னா. 


உணர்வுப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த பல தருணங்களைக் கொண்ட 'மை டியர் சிஸ்டர்' படத்தின் கண்ணை கவரும் புரோமோ அறிவிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 


படம் குறித்து இயக்குநர் பிரபு ஜெயராம் பகிர்ந்து கொண்டதாவது, "ஆணாதிக்கவாதியான பச்சை கிருஷ்ணனுக்கும் பெண்ணியவாதியான அவனது அக்கா நிர்மலா தேவிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள்தான் இந்தக் கதை. இந்த விஷூவல் புரோமோ உருவாவதற்கு பின்னால் செட்டில் அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸின் ஜாலியான பல தருணங்களை கொண்டே உருவாக்கினோம். திரையிலும் இவர்களது காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்" என்றார். 


பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, "அர்த்தமுள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. நல்ல கதைகள் மூலம் தனது திறமையை நிரூபித்து வரும் அருள்நிதி இந்தப் படம் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்வார். தனது தேர்ந்த ஆழமான நடிப்பிற்கு பெயர் பெற்ற மம்தா மோகன்தாஸ் இதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் மையக்கருவை விளக்கும் வகையில்தான் இந்த புரோமோ கிளிம்ப்ஸை உருவாக்கினோம். கோல்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், தயாரிப்பாளர் மனிஷ் ஷாவுடன் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்திருப்பது மகிழ்ச்சி. தமிழின் பல படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட்டு அங்குள்ள பார்வையாளர்களின் கவனத்தை தமிழ் சினிமா பக்கம் திருப்புவதில் மனிஷ் ஷா முக்கிய பங்காற்றி வருகிறார். இந்தக் கதை எண்டர்டெயின் செய்வதோடு பல உணர்வுப்பூர்வமான தருணங்களையும் கொண்டுள்ளது என்பதை உறுதியளிக்கிறேன்" என்றார். 


படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளது. சமூகத்திலும் குடும்பத்திலும் ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.


*நடிகர்கள்:*


அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், அருண்பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர். 


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


எழுத்து, இயக்கம் - பிரபு ஜெயராம்,

தயாரிப்பு - சுதன் சுந்தரம், மனிஷ் ஷா,

தயாரிப்பு நிறுவனம் - பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ்,

நிர்வாக தயாரிப்பாளர் - ஏ. குமார்,

ஒளிப்பதிவு - வெற்றிவேல் மகேந்திரன்,

எடிட்டர் - வெங்கட் ராஜன்,

கலை இயக்குநர் - கே. ஆறுசாமி,

இசை - நிவாஸ் கே. பிரசன்னா,

இணை இயக்குநர் - கபில் தேவ். எம் & ஆஷிஷ். பி,

பாடலாசிரியர் - உமா தேவி, மோகன் ராஜன், விக்னேஷ் ஸ்ரீகாந்த், ஜெகன் கவிராஜ், பிரபு ஜெயராம்,

ஸ்டண்ட் - கணேஷ்,

நடன இயக்குநர் - ஷங்கர் ஆர்,

ஸ்டில்ஸ் – ஆகாஷ் பாலாஜி,

ஆடை வடிவமைப்பு - தினேஷ் மனோகரன்,

டிஐ கலரிஸ்ட் - ஜான் ஸ்ரீராம்,

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் - ஃபாசில்,

டிஐ & விஎஃப்எக்ஸ் ஸ்டுடியோ - பிக்சல் லைட்ஸ்,

ஒலி வடிவமைப்பு - ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெபர்சன்,

டப்பிங் இன்ஜினியர் - என் வெங்கட பாரி

டியுபி, எஸ்எஃப்எக்ஸ் & மிக்ஸ் -  ஃபோர் ஃபிரேம்ஸ்,

மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர்,

விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் டி.கே.டி

No comments:

Post a Comment