Featured post

G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai

 _*G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’*_ G.V. Prakash Kumar’s...

Tuesday, 23 June 2026

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் *திரு.பி.விஸ்வநாதன்* அவர்களை

 மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் *திரு.பி.விஸ்வநாதன்* அவர்களை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் *SOP.விஜய் மகாலிங்கம் B.A.B.L.*, அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.





அப்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, உசிலம்பட்டி பகுதியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை மாண்புமிகு அமைச்சரிடம் வழங்கினார்.


இக்கல்லூரி அமைக்கப்பட்டால், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வியை எளிதில் தொடரும் வாய்ப்பு ஏற்படும் என்றும், பெண்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு இது பெரும் துணையாக அமையும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் *SOP.விஜய் மகாலிங்கம் B.A.B.L.*, அவர்கள் தெரிவித்தார்…

No comments:

Post a Comment