He Man Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம he man படத்தோட review அ தான் பாக்க போறோம். Travis Knight இயக்கி இருக்கற இந்த படத்துல Nicholas Galitzine, Camila Mendes, Idris Elba, Jared Leto, Alison Brie, Kristen Wiig, Morena Baccarin னு பலர் நடிச்சிருக்காங்க. இது சோ வாங்க இப்போ கதைக்குள்ள போலாம்.
he man cartoon எல்லா பசங்களுக்கும் பிடிச்ச ஒரு cartoon . இப்போ இதை ஒரு படமா எடுத்து release பண்ணிருக்காங்க. மறுபடியும் eternia உலகத்தை நம்ம கண்முன்னாடி கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துல நெறய adventure scenes , sword fight scenes , வித்யாசமான மிருகங்கள், magical power னு எல்லாமே இருக்கு. என்னதான் படம் ரெண்டு மணி நேரம் தாண்டினாலும் action , comedy னு எல்லாமே audience க்கு பிடிச்ச மாதிரி அமைச்சிருக்கு.
prince adam அ நடிச்சிருக்காரு Nicholas Galitzine , இவரு குழந்தைய இருக்கும்போதே பூமி க்கு அனுப்பி வைக்கிறாங்க. அதுக்கு காரணம் இவரு இருக்கற கிரகத்தை ஆண்டுட்டு இருந்த ராஜா வான King Randor அ நடிச்சிருக்க James Purefoy அ தாக்குதல் பண்ணுவாரு skeleton அ நடிச்சிருக்க Jared Leto . adam பூமி ல இருக்கற ஒரு company ல hr department ல வேலை பாத்துட்டு இருப்பாரு. இவரு இந்த வேலை ல ரொம்ப கண்ணும் கருத்துமா இருப்பாரு. ஆனா அதே சமயம் sword of power யும் தேடிட்டு இருப்பாரு. 15 வருஷம் கழிச்சு ஒரு வழியா இந்த sword அ கண்டு பிடிச்சிடுவாரு. teela வா நடிச்சிருக்க Camila Mendes ஓட உதவியால இவரு eternia க்கு போறாரு. ஆனா அந்த இடத்தை full control ல எடுத்து rule பண்ணிட்டு இருக்காரு skeleton . இவரோட அப்பாவான duncan அ நடிச்சிருக்க idris elba அப்புறம் teela ஓட உதைவியலா மறுபடியும் eternia வை பழைய நிலைமைக்கு கொண்டு வரணும் னு கஷ்டப்படுறாரு. sorceress அ நடிச்சிருக்க Morena Baccarin தான் grayskull ல இருக்கற ரகசியங்கள் எல்லாத்தயும் heman க்கு சொல்லி help பண்ணுறாங்க.
adam பூமி ல இருக்கற scenes எல்லாமே ரொம்ப comedy ஆவும் engaging ஆவும் இருந்தது.director travis knight , action scenes எல்லாத்தயும் பக்காவா படத்துல எடுத்துருக்காரு. அதுமட்டும் இல்ல ஒரு சில battle scenes யுமே பாக்க super அ இருந்தது. original cartoon ல எப்படி இருக்குமோ அதே மாதிரி தான் live action film ளையும் கொண்டு வந்திருக்காங்க. comedy லாம் கேட்க simple அ இருந்தாலும் audience அ சிரிக்க வைக்கிற மாதிரி அமைச்சிருந்தது.
நிக்கோலஸ், adam character க்கு ஏத்த actor அ இருக்காரு. adam அ இருக்கும்போது இவரோட charmness அப்புறம் he man அ மாறும்போது இவருக்கு வர strength னு நல்ல transformation அ காமிச்சிருந்தாரு. camila , teela ஓட character க்கு நல்ல set ஆயிருக்காங்க. இவங்களோட confidence , style எல்லாமே அட்டகாசமா இருந்தது. idris elba , duncan character க்கு கட்சிதமா பொருந்திருக்காரு. jared , skeleton அ நடிச்சி audience ஓட மனசுல இடம் பிடிச்சிட்டாரு னு தான் சொல்லணும்.
என்னதான் english ல பல superhero படங்கள் வந்தாலும், originality மாறாம , கதைக்களம் மாறாம ரொம்ப அருமையா எடுத்து வச்சிருக்காங்க. அந்த authenticity தான் பல audience க்கு பிடிச்சிருக்கு. eternia உலகத்தை காமிச்சா விதம் கண்டிப்பா heman fans க்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment