Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Monday, 23 March 2020

கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!


கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

"நாளை உனக்கொரு காலம் வரும்" என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு "வானே இடிந்ததம்மா" இரங்கல் பாடல் ஊடாக அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் சதீஸ் வர்சன் அஸ்மின் ஆகியோர்  இப் பாடல் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.



இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இவர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய  "புறம்போக்கு" திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இவரது புதல்வர்தான் உலகளவில் புகழ்பெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் .வர்சன் இப்பாடலுக்கு இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.

பாடல் வரிகளை தமிழ் சினிமாவில் "தப்பெல்லாம் தப்பேயில்லை" பாடலினூடாக விஜய் ஆண்டனி மூலம் அறிமுகமான இலங்கை கவிஞர் , பாடலாசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.

இலங்கையில் புகழ்பெற்ற கவிஞரான இவர் பல தேசிய விருதுகளையும் பெற்றவர். "விஸ்வாசம்" திரைப்படத்துக்கு இவர் எழுதிய (Tribute Song) 'தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு" பாடல் கூட வைரலானது குறிப்பிடத்தக்கது.

அம்மா இரங்கல் பாடல்


விஸ்வாசம் தூக்குத்தொர பாடல்

No comments:

Post a Comment