Featured post

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

 *சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்க...

Monday, 5 June 2023

குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட 'வீரன்' திரைப்படம்

 குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட 'வீரன்' திரைப்படம்!


ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தகிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள 'வீரன்' திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மண்சார்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருப்பதாலும் சென்னையில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 'வீரன்' திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. 














படத்தை விசில் அடித்துப் பார்த்து குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இயக்குநர் சரவன், நடிகர் ஆதி மற்றும் படக்குழுவினர்  படம் பார்த்த குழந்தைகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், படம் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்த பொதுமக்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவருக்கும் மேடையில் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment