Featured post

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை

 தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS  – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை !!  இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்...

Monday, 5 June 2023

குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட 'வீரன்' திரைப்படம்

 குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட 'வீரன்' திரைப்படம்!


ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தகிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள 'வீரன்' திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மண்சார்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருப்பதாலும் சென்னையில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 'வீரன்' திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. 














படத்தை விசில் அடித்துப் பார்த்து குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இயக்குநர் சரவன், நடிகர் ஆதி மற்றும் படக்குழுவினர்  படம் பார்த்த குழந்தைகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், படம் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்த பொதுமக்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவருக்கும் மேடையில் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment