Featured post

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!  ஜெ...

Friday, 28 July 2023

கேப்டன் மில்லருக்கு கார்த்தி வாழ்த்து

 கேப்டன் மில்லருக்கு கார்த்தி வாழ்த்து


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.





இன்று (ஜூலை 28) நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும் அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தனுஷுக்கு, நடிகர் கார்த்தி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். ‘தனுஷிற்கு இந்த வருடம் மிகச் சிறந்த வருடமாக அமைய என தனது வாழ்த்துக்கள்..’ என்று  தெரிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "புதிய பிராந்தியங்களை காட்டுவதற்கான உங்கள் கடின உழைப்பு கேப்டன் மில்லர் படத்திற்கு நிறைய பாராட்டுக்களை கொண்டு வரட்டும். சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இருவருக்கும் ஆல் தி பெஸ்ட்" என்று கூறியுள்ளார் கார்த்தி.


- Johnson PRO

No comments:

Post a Comment