Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Sunday, 9 July 2023

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10ஆம் தேதியன்று காலை

 *ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10ஆம் தேதியன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனை உங்களது நாட்காட்டியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.*


ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாவதால்.. இதன் கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி இருக்கிறது.




ஷாருக்கானின் மெகா படமான 'ஜவான்' படத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரிவ்யூ (Prevue), ஜூலை 10ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த உற்சாகமான செய்தியை ஷாருக்கான் தனது சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் மத்தியில் 'ஜவான்' படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது

 

'ஜவான்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு- முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டி இருக்கிறது. இது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள சமூக ஊடகங்கள் பலவற்றிலும் பல யூகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லீ இடையேயான கூட்டணி... அட்லீயின் படைப்பாற்றல் பார்வையும், ஷாருக்கானின் ஈடு இணையற்ற நட்சத்திரத்துடன் முதல் முதலாக இணைந்து பணியாற்றுவதாலும், ஷாருக்கானின் தோற்றத்தை காண்பதற்கான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.


உங்களது நாட்காட்டிகளில் குறித்து வைத்துக் கொண்டு 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ 

(Prevue) வெளியீட்டிற்கான கவுண்ட் டவுனில் எங்களுடன் இணைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக் கானுடன் பரபரப்பான சினிமா பயணத்தை தொடங்க தயாராகுங்கள். படத்தைப் பற்றிய புதிய அப்டேட்டுக்காக காத்திருங்கள். ஜவானின் உற்சாகத்திற்காக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.


'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்குகிறது.

அட்லீ இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment