பரியேறும் பெருமாள்" பணமும் குவிக்கும், மரியாதையும் பெறும்.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர்பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புசென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்"இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஅமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வாஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்...
“ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால்உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தேபிறக்கிறது. அப்படி எனக்குமுன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர்மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவுஎன்பது மனித சமூகத்தினையுடையமாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமேஇருந்தது. எனக்கு அம்பேத்கரின்துயரமான நாட்கள் தான் எப்போதும்நினைவில் இருக்கும். அவர் ஒருவிசயத்தை வேதனையோடுசொன்னார். நான் கஷ்டப்பட்டுஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில்நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்துஅதைப் பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான்முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப்“பரியேறும் பெருமாள்” படம். எனக்கிருக்கிற வாய்ப்புகளில்தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை முரணை உடைக்கிறவேலையை செய்வேன். இதனால் என்மீது வைக்கப்படுகிறவிமர்சனங்களையும் தாண்டி, சிலவேலைகளை செய்யவேண்டியிருக்கிறது. இந்தப் படம்உருவாவதற்கு நிறைய பேர் காரணமாகஇருந்திருக்கிறார்கள். அவர்களில்முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரிசெல்வராஜையும் பார்க்கும் போதுபொறாமையாக இருக்கும். இப்படி ஒருஅப்பா - மகனை இங்கு யாருமேபார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம்சார், மாரி செல்வராஜை கண்டெடுத்துஉருவாக்கியது மிகவும்நெகிழ்ச்சியானது. என்னால்முடிந்தவற்றை இந்த சமூகத்திற்குசெய்ய வேண்டும் என்கிற எண்ணம்சிறு வயது முதலே எனக்குண்டு. அந்தஎண்ணம் தான் இப்போதும் என்னைஇயக்குகிறது. சில நேரங்களில்குடும்பம், பொருளாதாரம் குறித்தயோசனை எழுந்தாலும், நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம், என்மனைவி அனிதா தான் எனக்குஊக்கமளிப்பார். நாம் எங்கிருந்துவந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல்போனாலும் ஒன்றும் பிரச்சனைஇல்லை. நீ செய்யும் வேலையைநிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்தபரியேறும் பெருமாள் திரைப்படம். கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் எனபடத்தில்
பணியாற்றிய அனைவரும் சிறப்பாகபணி புரிந்திருக்கிறார்கள். ஒருதயாரிப்பாளராக இந்தப் படம் எனக்குமுழு திருப்தியை கொடுத்திருக்கிறது.
யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என்நோக்கமல்ல, அவர்களது கையைக்கோர்த்து பக்கத்தில் அமர்ந்துஉரையாடுவதைத் தான் நான்விரும்புகிறேன். அந்த வேலையைபரியேறும் பெருமாள் நிச்சயமாகசெய்யும்.
அந்தளவிற்கு மாரி செல்வராஜ்சமரசமில்லாத ஒரு சினிமாவைஉருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ்நாரயணன் இசை படத்திற்கு மிகமுக்கியமான தூணாகஅமைந்திருக்கிறது. மொத்தத்தில்எனக்கு பிடித்த, நான் நம்புகிறசினிமாவாக பரியேறும் பெருமாள்வந்திருக்கிறது" என்று உணர்ச்சிகரமாகபேசினார்.
இயக்குநர் ராம் பேசுகையில்,
எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில்நீள அங்கி போட்ட ஒரு மனிதர்வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர்சுமந்து தான் ஆக வேண்டும். அதுஅவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.
மாரிசெல்வராஜ், ஒரு வாழ்வியலைவலியை வாழ்க்கையைப் பதியவைத்திருக்கிறார். திருநெல்வேலி என்றஊரையும் எனக்கு அறிமுகப் படுத்தியவன் மாரி செல்வராஜ். என்பாட்டன் அப்பன் வாழ்ந்த அந்ததிருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில்என்னையும் என் மகனையும் அமரவைத்தவன் மாரிசெல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல்விடப்பட்ட கூழாங்கல் அவன்.
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர்மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளைஎதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப்படத்திற்கு பிறகு கமர்ஷியல்ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம்கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ்சினிமாவின் அடையாளம், தமிழ்சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது.இந்தப் பரியேறும் பெருமாள் பணமும்குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது,
“இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்துகொள்வதிலோ எனக்கு எந்த பயமும்இப்போது இல்லை. காரணம் ராம்சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்குதைரியத்தை தந்திருக்கிறார்கள்.முதலில் நான் சினிமாவிற்குள்அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பலவழிகளிலும் துணை நின்றவர்களுக்கும்நன்றி. ஜாலியான ஒரு படம் செய்யலாம்என்ற நோக்கத்தில் எழுதஆரம்பிக்கப்பட்ட கதைதான் “பரியேறும்பெருமாள். ஆனால், போகப் போக அதன்வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரிபடிக்கும் போது நான் சந்தித்த, கடந்துபோன பல மனிதர்களும், சம்பவங்களும்இந்தப் படத்தை வேறு தளத்திற்குஎடுத்துப் போயிருக்கிறது. இந்தக்கதையை கேட்டதும், உடனேஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர்இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தைநம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்துமுடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராகஎனக்களிக்கப்பட்ட முழுமையான
சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான்நினைத்த மாதிரி எடுக்க உதவிஇருக்கிறது.
முதலில் இந்தப் படத்தின் இசை வேறுமாதிரி இருக்க வேண்டும் என முடிவுசெய்தோம். அதற்காகத் தான் சந்தோஷ்சாரிடம் பேசினோம். அதுமட்டுமல்லாமல், திருநெல்வேலிமண்ணின் மைந்தர்களையும், கலைஞர்களையும் பயன்படுத்திஇருக்கிறோம். முதலில் 5 பாடல்கள்தான் திட்டமிட்டோம், ஆனால்அவராகவே முன்வந்து இன்னொருபாடலையும் போட்டுக் கொடுத்தார்.
கேமராமேன் ஸ்ரீதர், எடிட்டர் செல்வாஇருவரும் இப்படத்திற்காக கடுமையாகஉழைத்திருக்கிறார்கள். கதிர், கயல்ஆனந்தி இருவரும் அந்த வாழ்க்கையைஉள்வாங்கிக் கொண்டுநடித்திருக்கிறார்கள். இப்படத்தில்யோகி பாபு அண்ணனின் பங்களிப்புமிகப் பெரியது. இப்படத்தில் கருப்பிஎன்கிற நாயின் கதாபாத்திரம்விவாதங்களை உண்டாக்கும். நான் ராம்சாருக்கு
திருப்பிக் கொடுக்க வேண்டும்நினைத்தது இந்தப் படம் தான். இன்றுஇங்கு என் குடும்பத்தார்கள் யாரும்இல்லை, ஆனால் மொத்தமாக ராம் சார்இங்கிருக்கிறார்” என்று நெகிழ்வாகபேசினார்.
இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் பேசும்போது,
“இந்த படத்தில் என்னை தாக்கினவிஷயம் மட்டும் சொல்கிறேன். பலவருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள்பெரிய அளவில் வருவார்கள். இது, மாரிசெல்வராஜிடம் ஆரம்பத்திலேயேதெரிந்தது. இந்த படம் எனக்குவாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம்.பொதுவாக ஊர் பக்கம் சென்று படம்எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது.அதை எப்படி உடைப்பது பற்றி மாரிசெல்வராஜ் என்னிடம் பேசியது எனக்குபிடித்தது. உலக சினிமா, பொதுமக்கள்பிடித்தது, நமக்கு பிடித்தது என்று மூன்றுவிதமாக இருந்தது. அதை அவர்சொன்ன விதம் எனக்கு பிடித்தது.
அவர் வாழ்க்கையில் நடந்ததை சுற்றிபடமாக்கி இருக்கிறார். அந்த ஊர்மக்களை அப்படியே உருவாக்கிஇருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும்இந்த படம் பிடிக்கும். கருப்பி பாடல்வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள்பார்த்து என்னை பாராட்டினார்கள். மாரிஎன்ற இயக்குநர் தமிழ் சினிமாவைஎப்படி கொண்டுபோவார் என்று எனக்குஒரு கனவு வந்தது. அதை நீங்கள்
உணர்வீர்கள். பாடல் காட்சிகளைபார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்குஉணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித்போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும்போது இதுபோன்ற படைப்புகள்கண்டிப்பாக வரும். என்னுடன் வேலைபார்த்த நண்பர்கள் அனைவருக்கும்நன்றி” என்று பேசினார்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் இம்மாதம்(செப்டம்பர்) 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
உங்கள் மேலான அன்பையும்
ஆதரவையும் தொடர்ந்து விரும்பும்...
No comments:
Post a Comment