இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் , ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கிவருகிறது.
இதன் தொடர்சியாக அமெரிக்க தமிழ்சங்கம் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரிசெல்வராஜ் க்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள்.
வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜ் க்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.
இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது. இது போன்ற படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் இனி முன்வருவார்கள்
பரியேறும் பெருமாள் குழுவினருக்கு வாசிங்டன் தமிழ்சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment