பணத்திற்கு ஆசைப்பட்டு உறவுமுறை
மாறினால் நிகழும்
விபரீத விளைவுதான்" காசிமேடு கேட்"
திரைப்படம் |
அண்ணன், அண்ணி, தம்பி மூவரும் வசிக்கும் இடத்தில்
ரவுடிகளின் அட்டகாசத்தால் அந்த இடத்தில் வசிப்பவர்கள் ஒருவித திகிலுடனே வாழ்கின்றனர்.
அண்ணனின் அபரிதமான பணத்தை அபகரிக்க ரவுடி கும்பலுடன் தம்பி சேருகிறான்.
இந்த கூட்டுசதியில் அண்ணியும் ஈடுபட
அதன் பிறகு நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்கள் தான் " காசிமேடு கேட்" படத்தின் மையக்கருவாக வைத்து படத்தை எடுத்துள்ளதாக" படத்தைப் பற்றி இயக்குனர் ஒய். ராஜ்குமார கூறினார்.
இதில் வேணுகோபால, யஷ்வன், சுரபி திவாரி, கிஷ்கை சவுத்ரி, ஏபிஎம்.சாய்குமார், பர்த்து, ராகம்மா ரெட்டி, கங்காதர், அனுஷா ஜெயின், சுதிக்ஸ் ஜகா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹைதராபாத், பெங்களூர், சென்னையில் காசிமேடு மற்றும் மெரினா கடற்கரை, பட்டிணம்பாக்கம் பகுதிகளில் படத்தை படமாக்கி உள்ளனர்.
யோகி ரெட்டி கேமராவையும், சிவ சர்வாணி படத்தொகுப்பையும்,
விங் சுன் அன்ஜி சண்டைப் பயிற்சியையும், அனீஷ் நடன பயிற்சியையும் ,
ஜெ. திம்மராயுடு இணை தயாரிப்பையும்,
பைய வரப்பு ரவி வசனத்தையும், பாஸ்கர பட்லா - மணிகண்ட சங்கு பாடல்களையும், என்.எஸ்.பிரசு இசையையும் கவனிக்கின்றனர்.
ஒய்.எம்.ஆர். கிரியேசன்ஸ் சார்பில் உருவாகி உள்ள இப்படத்தை ஒய். ராஜ்குமார் இயக்கி உள்ளார்.
N. விஜயமுரளி
PRO
No comments:
Post a Comment