Featured post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம்

 *பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எ...

Wednesday 7 June 2023

பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம்

 பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா  சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது!


பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான #BoyapatiRAPO வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு இன்று மைசூரில் தொடங்குகிறது. இம்மாதம் 15ம் தேதி வரை நடக்கும் இந்த ஷெட்யூலில், அதிரடியான ஆக்ஷன் காட்சியும், ஒரு பாடலும் படமாக்கப்பட உள்ளது. ஒரு பாடலைத் தவிர படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இந்த ஷெட்யூலுடன் முடித்துவிடும். மைசூர் விமான நிலையத்திலிருந்து ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் கேண்டிட் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.









ராமின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட முதல் பார்வையில் அவரை முரட்டுத்தனமான, மாஸ் தோற்றத்துடன் காட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.


சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்ய, எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை பெருமையுடன் தயாரித்துள்ளார். இதை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார்.


நடிகர்கள்: ராம் பொதினேனி, ஸ்ரீலீலா


*தொழில்நுட்பக் குழு*:

எழுத்து, இயக்கம்: போயபதி ஸ்ரீனு,

தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,

பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,

வழங்குபவர்கள்: ஜீ ஸ்டுடியோஸ் சவுத், பவன் குமார்,

இசை: எஸ்எஸ் தமன்,

ஒளிப்பதிவு: சந்தோஷ் டிடேக்,

எடிட்டிங்: தம்முராஜு

No comments:

Post a Comment