Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Tuesday, 18 July 2023

ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்

 *ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.*

*உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில்*

*ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி - வைரமுத்து - K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள்!*





பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில்  மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர்  ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.

உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் 

ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி - வைரமுத்து - K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள்! 


மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்

இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரமாண்டமான ‘ஜென்டில்மேன்’ வெற்றிப்படத்தை தயாரித்தார்.

இப்படம் வெளியாகி 30 வருடங்களாகிய நிலையில், இரண்டாம் பாகமாக  '‘ஜென்டில்மேன்-2’' படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.


A.கோகுல் கிருஷ்ணா இந்தப்படத்தை இயக்குகிறார். ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். 

பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை அஜயன் வின்சென்ட்டும், 

கலையை தோட்டா தரணியும் கவனிக்கின்றனர்.


இதன் முதல் கட்டமாக பாடல் கம்போசிங் வேலைகள் ஆரம்பமாகிறது. 

கொச்சியில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற 'போல்காட்டி பேலஸ் தீவில்' பாடல் கம்போசிங்  நடப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார் கே.டி.கே.

இதற்காக, இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வருகிற 19ம் தேதி அங்கு வருகிறார். இவருடன் கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைகிறார். 

எம்.எம்.கீரவாணி தமிழில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த 'பாட்டொன்று கேட்டேன்', சேவகன், வானமே எல்லை,   ஜாதிமல்லி உள்ளிட்ட பல படங்கள் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து ஹிட் பாடல்கள் கொடுதுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கூட்டணியுடன், இந்திய அளவில் பிரமிக்க வைத்த பட பாடல்களை தயாரித்த மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இணைந்து உருவாகுவது சிறப்பு வாய்ந்தது. 


இந்தப்படத்தில் பங்குபெறும்  நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் அடுத்தடுத்து  வெளிவரும்.

விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகும். 


- *Johnson*

No comments:

Post a Comment