Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Thursday, 13 July 2023

ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு இணைய

 ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு இணைய தொடராக வரவேற்பை பெற்று வரும் பிரைம் வீடியோவின் 'ஸ்வீட் காரம் காபி'


பிரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காபி' என்பது ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பிரத்யேக பெண்களை பற்றிய நம்ப முடியாத கதை. ஆனால் மறக்க முடியாத.. அசாதாரண பயணத்தை தொடங்கும் வெவ்வேறு தலைமுறையினர்..பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்துகின்றனர். தன்னிச்சையாக மேற்கொள்ளும் பயணத்தை சுற்றி சுழலும் இந்த இணைய தொடர், சுய அன்பு பற்றி விவரிப்பதால் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் காணலாம் அல்லது தனித்தும் காணலாம். 



சலிப்பான நடைமுறைகளிலிருந்து தப்பித்து, அவர்களை பிணைக்கும் சமூக விதிமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான.. அவர்களின் தேவையால் தூண்டப்பட்ட.. ஒரு மனக்கிளர்ச்சியான சாலை பயணத்தை தொடங்குவது... அந்தப் பயணம் விரைவில் சுய கண்டுபிடிப்புடன் உருமாறும் பயணமாக மாற்றம் பெறுகிறது. தலைப்பை போலவே 'ஸ்வீட் காரம் காபி' படைப்பில் சில அதிசயமான இனிப்பான தருணங்களும் மற்றும் ஆச்சரியமளிக்கும் காரமான தருணங்களும் உள்ளன. காலையில் காபியை சீக்கிரமாக பருகுவதைப் போலவே.. 'ஸ்வீட் காரம் காபி' ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களது நரம்புகளை மென்மையாக சாந்தப்படுத்துகிறது. 


இந்தத் தொடர்.. பெண்களுக்கு அதிகாரமளித்தலை பற்றிய தொடர். மூன்று பெண்களைப் பற்றிய ஒரு வசீகரமான கதையையும் சொல்கிறது. அவர்கள் தங்கள் சொந்த உலகங்களில் சிக்கி, அழகியல், உற்சாகம் மற்றும் ஆன்மாவை தேடும் பயணத்தை தொடங்க.. பார்வையாளர்களிடம் தங்களை ஒப்படைக்கிறார்கள். நடிகர்கள் லட்சுமி, மது, சாந்தி பாலச்சந்திரன் ஆகியோரின் அற்புதமான நடிப்பைக் கொண்டிருக்கும் இந்தத் தொடர்... இந்த பெண்களின் ஆசைகள், பாதுகாப்பின்மை மற்றும் தடைகற்கள் ஆகியவற்றின் அழகான கலவையாகும். 


மேலோட்டமாக பார்த்தால் 'ஸ்வீட் காரம் காபி' என்பது பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த நேரத்தை அனுபவிக்கும் எளிய நேரடியான மற்றும் மனதைக் கவரும் கதை. ஆனால் ஒரு எளிய கப் காஃபியை போல் அல்லாமல்.. இப்படத்தின் கதைகளம் ஆழமான பல அடுக்குகளையும், கதைகளையும் கொண்டிருக்கிறது‌.  


இயக்குநர்கள் பிஜாய் நம்பியார் கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகிய மூன்று இயக்குநர்கள் இயக்கியிருக்கும் இந்த தொடரில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஸ்வீட் காரம் காஃபி' அதன் கவர்ச்சிகரமான கதை மூலம் பார்வையாளர்களை கவரும் என உறுதியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இந்த இணையத் தொடரை தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், தமிழில் நேரடியாகவும் காணலாம்.

No comments:

Post a Comment