Featured post

BISKON’25 – CTMA’s Inaugural Event Sparks Innovation and Inspiration for Entrepreneu

 BISKON’25 – CTMA’s Inaugural Event Sparks Innovation and Inspiration for Entrepreneurs Under the leadership of Mr. V.C. Praveen, the Confed...

Thursday, 13 July 2023

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து

 பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து வழங்கும் ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’!


சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஒரு படத்திற்காக ஒன்றிணையும் போது அது வர்த்தக வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ இதுபோன்ற ஒரு வலுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த இயக்குநரான நிதிலன் சாமிநாதனுடன் விஜய் சேதுபதி இணைந்துள்ள படம்தான் ‘மகாராஜா’. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் பல படங்களைத் தந்த ’பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் ’தி ரூட்’ ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து தயாரித்துள்ளார்.









விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் திறமை வாய்ந்த தொழில்நுட்பக்குழு என்ற சிறந்த கூட்டணியைக் கொண்டுள்ளதால், இந்தப் படமானது பான்-இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


’மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக்குழு விவரம்:*

இசை: அஜனீஷ் லோக்நாத், 

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்,

எடிட்டிங்: பிலோமின் ராஜ், 

கலை இயக்குநர்: வி செல்வகுமார், 

வசனம்: நித்திலன் சாமிநாதன் & ராம் முரளி, 

சண்டைப்பயிற்சி: அனல் அரசு, 

ஒப்பனை: ஏஆர் அப்துல் ரசாக், 

ஆடை வடிவமைப்பாளர்: தினேஷ் மனோகரன், 

படங்கள்: ஆகாஷ் பாலாஜி, 

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி'ஒன், 

டிஜிட்டல் புரமோஷன்: கார்த்திக் ரவிவர்மா, 

தயாரிப்பு நிர்வாகி: கே சக்திவேல்-சுசி காமராஜ்.

No comments:

Post a Comment