Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Thursday, 13 July 2023

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார்

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது* 



வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 


நானியின் 30வது படமான 'hi நான்னா' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. 


#Nani30 என்று அழைக்கப்படும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. வித்தியாசமான கதைக்களம் உள்ள திரைப்படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி அவ்வாறான ஒரு கதையையே தற்போதும் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது முதல் பார்வை மூலம் புலனாகிறது. 


தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். இயக்குநராக அறிமுகமாகும் ஷௌர்யுவ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவார் என்று அவர்கள் மேலும் கூறினர். 


தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் இந்தியில் 'hi பப்பா' என்ற தலைப்பில் உருவாகிறது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் நானியின் தோள்களில் அமர்ந்திருக்கும் குழந்தை அவர்களுக்குப் பின்னால் நிற்கும் மிருணாலுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்கிறது. பார்ப்போரை கவரும் வகையில் வண்ணமயமாக முதல் பார்வை அமைந்துள்ளது. 


ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் 'hi நான்னா' உருவாகிறது. அப்பா-மகள் பாசத்தை திரையில் சொல்ல மொழி ஒரு தடையல்ல என்பதால் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் எளிதாக சென்றடையும். 'Hi நான்னா' இவ்வருடம் டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும். 


படக்குழுவினர்: 


நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர் 

இயக்கம்: ஷௌர்யுவ் 

தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா 

தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்

சிஓஓ: கோட்டி பருச்சூரி 

ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்

இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்

தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா 

படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி 

நிர்வாகத் தயாரிப்பாளர் - சதீஷ் ஈ.வி.வி

ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன் 


***

No comments:

Post a Comment