Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Sunday, 6 October 2024

மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது

மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது!!



எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்திலிருந்து   "மார்டின் ஆந்தம்",  பாடல் வெளியானது!!


இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல்  கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. 


ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. 



பாடலின் வரிகளை: - கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் - தமிழ்: விவேகா - தெலுங்கு: ஸ்ரீமணி - ஹிந்தி: ஷபீர் அகமது - மலையாளம்: விநாயக ஷஷி குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த ஆந்தம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க  13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.


வாசவி என்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்‌ஷன் இணைந்து  “மார்டின்”  படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜுன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Tamil - https://youtu.be/YC9vEkwuqrA

Kannada - https://youtu.be/HL7i06ifrIc

Hindi - https://youtu.be/B4VRuDQfh9k

Telugu - https://youtu.be/hKFoaMW7oSE

Malayalam - https://youtu.be/Np4Pw2JP-Ls

No comments:

Post a Comment