Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Sunday, 6 October 2024

சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' டிரைலர்

 *சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' டிரைலர்*







*ஃபேன்டஸி படத்தின் டிரைலரை வெளியிட்ட சிலம்பரசன் டி.ஆர்*


*சிலம்பரசன் வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' ஃபேன்டஸி பட டிரைலர்*


ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக 'ராக்கெட் டிரைவர்' உருவாகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 


இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், 'ராக்கெட் டிரைவர்' புதிய படமாக இணையும் என்று தெரிகிறது.


இந்தப் படத்தின் டிரெயிலரை வெளியிட்ட நடிகர் சிலம்பரசனுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர். 'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் ஆட்டு ஓட்டுநர், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார். 


இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கும் போது ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் கலகலப்பாகவும், பொழுதுபோக்காகவும் சொல்லும் கதையை கொண்டுள்ளது. 


இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுக நாயகன் விஸ்வத் நடிக்கிறார். நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


'ராக்கெட் டிரைவர்' படத்திற்கு கௌசிக் கிரிஷ் இசையமைக்க, ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியனும், கலை இயக்க பணிகளை பிரேம் கருந்தமலையும் மேற்கொண்டனர்.


இந்தப் படத்தின் கதையை அக்ஷய் பூல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்குகிறார்.

No comments:

Post a Comment