Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Saturday, 5 October 2024

அங்கம்மாள் என்ற திரைப்படமாக மாறிய எழுத்தாளர்

 *அங்கம்மாள் என்ற திரைப்படமாக மாறிய எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை!*










 *அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு* 


பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் "அங்கம்மாள்". இப்படம்  மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. 


பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் இதுதான் முதன்முறை. 


விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள *அங்கம்மாள்* படத்தை என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெருமாள் முருகனின் ‘கோடித்துணிக்கு புதிய உருவத்தை தரும் விதமாக அங்கம்மாள்  உருவாகியுள்ளது.


*நடிகர்கள்*


கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் மற்றும் பலர் 


*தொழில்நுட்பக் குழுவினர் விவரம்*


தயாரிப்பு ; என்ஜாய் பிலிம்ஸ்

 

தயாரிப்பாளர்கள் ; பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்


இணை தயாரிப்பாளர்கள் ; சம்சுதீன் காலித், அனு ஆப்ரஹாம், EL விஜின் வின்சென்ட் பீப்பி  .......,,..........................................................நிர்வாக தயாரிப்பு: அசாந்த் ராஜ் , கீர்த்தி நிபு                               .................,............................நிர்வாக மேலாளர்: பிரவின் வாமாராஜன்


கதை ; பெருமாள் முருகன்


திரைக்கதை & இயக்கம் ; விபின் ராதாகிருஷ்ணன்                  


ஒளிப்பதிவு ; அஞ்சாய் சாமுவேல்


இசை மற்றும் பின்னணி இசை ; முகம்மது மக்பூல் மன்சூர் 


 படத்தொகுப்பு ; பிரதீப் சங்கர் 


கலை இயக்குநர் ; கோபி கருணாநிதி


ஒலிக்கலவை ; T.கிருஷ்ணன் உன்னி (தேசிய விருது பெற்றவர்)


ஆடை வடிவமைப்பு ; தன்யா பாலகிருஷ்ணன் (மாநில அரசு விருது பெற்றவர்)


வசனம் ; சுதாகர் தாஸ், விபின் ராதாகிருஷ்ணன்..........................,............................இணை இயக்கம்: G M பாண்டீஸ்வரா


ஒப்பனை ; வினீஸ் ராஜேஷ்

..........................................புகைப்பட கலைஞர்: ஸைன் செட்டிங்குலங்கரா......................

மக்கள் தொடர்பு ; A.ஜான் ...................................................................   விளம்பர வடிவமைப்பு: அனந்து அசோகன்


பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ மிகப்பெரிய அளவில் அங்கீகாரங்களையும் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை. இந்தக்கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. மேலும் உலக திரைப்பட விழாக்களுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment