Featured post

Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy

 Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore ...

Saturday, 21 June 2025

வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான

 *'வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான சரியான கதைக்களத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது '- அயன் முகர்ஜி*



யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வார் 2 .இப்படம்  இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் YRF ஸ்பை யுனிவர்சலில் இது ஆறாவது படமாகும். இந்திய சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரையும் மோத வைப்பதற்காக கதைக்களத்தை  வார்  2 படத்தில் வடிவமைப்பதில், தான் எவ்வாறு முழுமையாக கவனம் செலுத்தினார் என்பதை அயன் முகர்ஜி கூறியுள்ளார் . 


அயன் முகர்ஜி கூறுகையில் , “வார் 2 போன்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தை முன்னெடுத்துச் சென்று அதில் என் சொந்த முத்திரையைப் பதிப்பது ஒரு பெரிய பொறுப்பு. வார் 2 படத்தை இயக்குவதை நான் முதல் படத்திற்கு ஒரு மரியாதை செலுத்தும் வாய்ப்பாகப் பார்த்தேன். இல்லையெனில், இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற உரிமையை ஏற்க முடியாது . மிகப்பெரிய பிளாக்பஸ்டர் தொடருடன் இணையும் போது நீங்கள் விளையாட்டு தனமாக இருக்க முடியாது. ஒருவர் ஏற்கனவே உருவாக்கிய படத்தை எடுத்துக்கொண்டு, பின்னர் அந்த படத்தின் ரசிகர்களையும், நம் நாட்டின் இந்த பிரம்மாண்டமான சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்களையும் ஒரு புதிய பயணத்தில் செல்ல வைக்க வேண்டும்,ஒரு இயக்குநராக, நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த உணர்வை வழங்குவதற்காக நான் முழுமையாக என்னை அர்ப்பணித்தேன்.”


அவர் மேலும் கூறுகையில் , “வார் 2 படத்தின் அனைத்து பார்வையாளர்களின் திரையரங்க அனுபவத்தை உயர்த்துவதற்காக நிறைய திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதிலும், கதைக்களத்தையும் மோதலையும் வடிவமைப்பதிலும் அதிக நேரம் செலவிடப்பட்டது.இது ஹ்ரித்திக் ரோஷனுக்கும், என்.டி.ஆருக்கும் இடையேயான மோதலை உருவாக்குவதற்கு தேவையாக இருந்தது.”


வார் 2 இந்திய சினிமாவின் வலிமையைக் கொண்டாடும் ஒரு படம். ஏனெனில் இப்படம் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரை வேறு எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு அற்புதமான தியேட்டர் அனுவத்தை ரசிகர்களுக்கு தர காத்திருக்கிறது. 


இந்த இரண்டு பெரிய நடிகர்களும் இந்திய சினிமாவிற்காக ஒன்றினைந்து நடித்துள்ளனர் . இதனால் அவர்களின் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் . மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் அமர்ந்திருக்கும்போது அவர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஒவ்வொரு நொடியும் யோசித்துக்கொண்டிருக்கிறோம் .” என இவ்வாறு தெரிவித்துள்ளார் .


வார் 2 படம் இந்தாண்டு வருகின்ற ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது  .

No comments:

Post a Comment