Featured post

GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI*

 *'GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI* *‘GANDHI – Mantras of Compassion’ - A Transformation...

Saturday, 28 June 2025

இசையமைப்பாளர், இயக்குநர் மார்ட்டின் கிளெமெண்ட் -

 இசையமைப்பாளர், இயக்குநர் மார்ட்டின் கிளெமெண்ட் - ஷர்மிளா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!






‘யுவன் ராபின்ஹுட்’ பட இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது


கன்னட சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், ‘யுவன் ராபின்ஹுட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட் இசை பணியில் பிஸியாக இருக்கிறார்.


ஒரு பக்கம் இசை என்றால் மறுபக்கம் இயக்கம் என்று 5 திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், இயக்கிய கன்னட திரைப்படமான ’மார்ட்டின் யு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, வித்தியாசமான மிஸ்டரி திகில் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தின் மூலம் இயக்குநராக மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் கவனம் ஈர்த்த மார்ட்டின் கிளெமெண்ட், தமிழ் சினிமாவிலும் தனது இசை மூலம் நிச்சயம ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன் என்ற நம்பிக்கையில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 


இந்த நிலையில், மார்ட்டின் கிளெமெண்ட் மனைவி ஷர்மிளா பிரசவத்திற்காக திண்டிவனத்தில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 25 ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதால் ஏற்கனவே பெரும் மகிழ்ச்சியில் இருந்த மார்ட்டின் கிளெமெண்ட் தந்தையாகியுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.


இதில்,  கூடுதல் சிறப்பு என்னவென்றால், மார்ட்டின் கிளெமெண்ட்டின் மனைவி ஷர்மிளாவின் பிறந்த தினமும் இதே ஜூன் 25 தான். ஆம், தாயும், மகனும் ஜூன் 25 ஆம் தேதி பிறந்திருக்கிறார்கள். குழந்தை பிறப்பே மட்டற்ற மகிழ்ச்சியை தரும் நிலையில், இப்படி ஒரு சிறப்புடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையால் மார்ட்டின் கிளெமெண்ட்டின் குடும்பம் அளவுக்கடந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.


சென்னையில் பிறந்து, பெங்களூரில் படித்து வளர்ந்த மார்ட்டின் கிளெமெண்ட், கன்னட திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமானாலும், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் என்னவோ,  திண்டிவனத்தை சேர்ந்த ஷர்மிளாவை திருமணம் செய்துக் கொண்டவர், தற்போது சினிமாவுக்காக சென்னை டூ பெங்களூர் என்று பயணித்து தனது சினிமா பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment