Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Tuesday, 10 June 2025

காட் ஆஃப் மாஸஸ்' , 'பத்ம பூஷண்' டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும்

 *'காட் ஆஃப் மாஸஸ்' , 'பத்ம பூஷண்' டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு* 




*'காட் ஆஃப் மாஸஸ்' நந்தமுரி பாலகிருஷ்ணா - பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு - ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் - எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் 'அகண்டா 2 : தாண்டவம் ' படத்தின் டீசர் 'பத்மபூஷண் ' பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.*


'காட் ஆப் மாஸஸ் ' நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'அகண்டா 2 : தாண்டவம்'. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற 'அகண்டா' திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் இரண்டாம் பாகம், அதிரடி மிக்க ஆக்சன் படைப்பாக இருக்கும் என படக் குழு உறுதி அளிக்கிறது. ஆக்சன் காட்சிகள்- ஆன்மீக பின்னணியுடன் கலந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார். 


' பத்மபூஷண் 'நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ' அகண்டா 2 : தாண்டவம்' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். படக்குழு, படத்தின் நாயகனான பாலகிருஷ்ணாவிற்கு பிறந்தநாள் பரிசாக இந்த டீசரை வெளியிட்டுள்ளனர். 


இந்த டீசரில் பாலகிருஷ்ணாவின் பரபரப்பான மிரட்டலான தோற்றம் - அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தோன்றக்கூடிய மூர்க்கத்தனமும், தெய்வீகத்தின் ஆற்றலும் கலந்த கலவையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் போயபதி ஸ்ரீனு மீண்டும் ஒருமுறை பாலகிருஷ்ணாவை வேறு எவரையும் விட நன்றாக புரிந்து வைத்திருப்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் நட்சத்திர பிம்பத்தை கூடுதலாக பிரகாசிக்கும் வகையில் படத்தின் டீசரை அவர் உருவாக்கி இருக்கிறார். 


நந்தி - திரிசூலம் - பனி மூடிய கைலாசம் இவற்றின் பின்னணி பார்வையாளர்களை வசீகரிக்கிறது. அத்துடன் கதாபாத்திரத்தின் நுட்பத்தையும், படம் பேசும் விசயத்தையும் பிரதிபலிக்கிறது. பாலகிருஷ்ணாவின் கம்பீரமான தோற்றமும், நடையும் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. 


அவர் குண்டர்களை ஒதுக்கி தள்ளும் காட்சிகளும், திரிசூலத்துடன் கூடிய ஷாட்டும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்கிறது. சண்டை பயிற்சி இயக்குநர்களான ராம்- லக்ஷ்மன் பாலகிருஷ்ணாவின் திறமையை துல்லியமாக வடிவமைத்துள்ளனர். அவரது உரையாடல் எப்போதும் போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. 


எஸ். தமனின் பின்னணி இசை, டீசரை தெய்வீகமான உணர்வுக்கு உயர்த்துகிறது. பாலகிருஷ்ணாவின் தோற்றம் பிரம்மாண்டத்தை நிறைவு செய்கிறது. பாலகிருஷ்ணாவிற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமன் முற்றிலும் மற்றொரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.


14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் தரம் மிக உயர்ந்தவை என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமும், செழுமையும் இணைந்திருக்கின்றன. 


இந்த டீசரின் ஒவ்வொரு ஃபிரேமும் .. குழுவினரின் பேரார்வத்துடன் கூடிய அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.


தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு வியப்பில் ஆழ்த்தக்கூடிய காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 


நவராத்திரி திருவிழா விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் 'அகண்டா 2 :-தாண்டவம்'  படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் தெய்வீகம் .. தேசம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை காந்தம் போல் ஈர்க்கும் என்பது உறுதி. இந்த டீசர் ஏற்கனவே அந்த மாயஜாலத்தை நிகழ்த்தியுள்ளது.


'அகண்டா 2: தாண்டவம் ' படத்தில் நடிகர் ஆதி பினிஷெட்டி வில்லனாக நடிக்கிறார். 'அகண்டா' படத்தின் முதல் பாகத்தில் நாயகனுக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா இதிலும் நாயகியாக தொடர்கிறார். இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.


சி . ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தம்மிராஜு கவனிக்க கலை இயக்குநராக ஏ. எஸ் .பிரகாஷ் பணியாற்றி வருகிறார். 


நடிகர்கள் : 

'காட் ஆப் மாஸஸ் ' நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி .


தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : போயபதி ஸ்ரீனு

தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா 

தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ் 

வழங்குபவர் : எம் தேஜஸ்வினி நந்தமுரி 

இசை : எஸ். தமன் 

ஒளிப்பதிவு : சி. ராம் பிரசாத் - சந்தோஷ் டி டெடகே 

கலை : ஏ .எஸ். பிரகாஷ் 

படத்தொகுப்பு : தம்மிராஜு 

சண்டை பயிற்சி : ராம் - லக்ஷ்மன் 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


https://youtu.be/BU90JJ8u2bA

No comments:

Post a Comment