Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Saturday, 7 June 2025

சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்

 *"சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்*





*சன் பிக்சர்ஸ் - அல்லு அர்ஜுன் -அட்லீயின் #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன்*


சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


நூறு கோடி... இருநூறு கோடி... ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்யேக முத்திரையை பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில்  பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து தனித்துவமான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார்.



சர்வதேச திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் #AA22xA6 படத்தின்  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, இந்திய திரையுலகில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிர்வை ஏற்படுத்தியது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.


'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுனின் காந்தம் போல் இழுக்கும் திரை தோற்றம் - பிரம்மாண்டத்தின் சர்வதேச அடையாளமாகத் திகழும் இயக்குநர் அட்லீ மற்றும் வெற்றிகளை தொடர்ச்சியாக வழங்கி, தனித்துவமான தயாரிப்பு நிறுவனம் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் சன் பிக்சர்ஸ் - இவர்களுடன் திறமையான நடிப்பாலும், வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களை வசப்படுத்தியிருக்கும் தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார்.‌ இதனால் இந்த படம் சர்வதேச அளவிலான திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 


இந்தப் படத்தில் ஏற்கனவே சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். படக் குழுவினர் வெளியிட்டிருக்கும் இந்த புது தகவலால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இனி தொடர்ந்து வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருப்பதால்.. ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க தொடங்கி இருக்கிறார்கள்.


https://www.youtube.com/watch?v=jlmT4apm1oI

No comments:

Post a Comment