Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Friday, 6 June 2025

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

 பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”. 

 






ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும்         கே. பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார் .

 

அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப்  பயிற்சிகளை கற்று,  அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை  உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த திரைப்படத்தின் கதை.

 

 

இத்திரைப்படத்தில், கே. பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடிகண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அன்பர்களும் நடித்திருக்கிறார்கள்.

 

"ஆனந்த வாழ்க்கை" என்ற இத்திரைப்படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெங்களூரு இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும் (INNOVATIVE  FILM ACADEMY) இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட போட்டியில் "பாஞ்சாலி" என்ற குறும் படத்திற்காக முதல் பரிசு வென்றவர். இவர் தற்பொழுது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

 

#கேங்கர்ஸ் மற்றும் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த சத்யா.C . இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு K.கோகுல், எடிட்டிங் சிவராஜ், புரோடக்க்ஷன் மேனேஜர்  M.உதயகுமார், ஒலிப்பதிவு A.கஜபதி, DI.கார்த்தி, இணை இயக்கம் ராமு மா.சே. ஒருங்கிணைப்பு  குரு அரங்கதுரை, மக்கள் தொடர்பு ஜான்சன், டிசைன் NV.அகிலன் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

 

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை ஆழியாறு அருள்நிதி.CEO.திரு.P. முருகானந்தம் கவனிக்கிறார்.

  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, பத்மஸ்ரீ. திரு. SKM.மயிலானந்தம்  வழிகாட்டுதலின்படி இத்திரைப்படத்தை ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம்  தயாரித்திருக்கிறது.

No comments:

Post a Comment