Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Friday, 13 June 2025

கேன்ஸ் திரைப்பட விழாவில் " டிராக்டர் " திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

 கேன்ஸ் திரைப்பட விழாவில்                  " டிராக்டர் " திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.





பிரான்சில் உள்ள ஃப்ரைடே என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில், ரமேஷ் யந்த்ரா இயக்கத்தில் உருவான டிராக்டர் திரைப்படம் முதன் முதலாக பிரேசிலில் 48வது Mostra São Paulo சர்வதேச திரைப்பட விழாவில் World Premier ஆக திரையிட பட்டது.


அத்துடன் டிராக்டர் திரைப்படம் இந்த வருடம் டொமினிக்கன் நாட்டில் உள்ள Santo Domingo திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு திரைப்படங்களில் டிராக்டர் திரைப்படம் ஒன்றாகும்.


தற்பொழுது  டிராக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள பாரத் அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தேசிய விருது பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் டாக்டர்.பிஜு வெளியிட்டுள்ளார். டிராக்டர் ட்ரைலர் வெளீட்டில் டாக்டர்.பிஜு மற்றும் தயாரிப்பாளர் ஜெயந்தன்.


டிராக்டர் திரைப்படம் நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையை பயன்படுத்தியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சொல்லி தனியார்  கம்பெனிகள்  செய்துவரும் ஏமாற்று வேலைகளையும்  மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.


விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


தயாரிப்பு: ஜெயந்தன் 

இயக்கம்: ரமேஷ் யந்த்ரா.

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்.

No comments:

Post a Comment