Featured post

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimpse Promises A Fun-Filled Ride

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimp...

Saturday, 14 June 2025

Padai Thalaivan Movie Review

 Padai Thalaivan Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம படைத்தலைவன் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். u anbu இயக்கி இருக்கற இந்த படத்துல Shanmuga Pandian யும்  Yamini Chander யும் lead role ல நடிச்சிருக்காங்க. இவங்களோட  Kasthuri Raja, Munishkanth, M.S. Bhaskar, Karudan Ram, Rishi Rithvik, A. Venkatesh, Yugi Sethu, Sreejith Ravi, Aruldoss னு பலர் நடிச்சிருக்காங்க. 



இந்த படத்தோட கதையை பாத்தீங்கன்னா odisha ல இருக்கற ஒரு கிராமத்தை காமிக்கறாங்க. அங்க வனதேவதையா கும்புடற ஒரு மக்கள் கூட்டம் இருக்கும். இவங்க எல்லாரையும் மிரட்டி தன்னோட கட்டுக்குள்ள வச்சிருக்காரு thilagan அ நடிச்சிருக்க garudan ram . இப்போ அப்பிடியே பொள்ளாச்சி ல இருக்கற sethumadai யா காமிக்கறாங்க. அங்க தான் velu வ நடிச்சிருக்க  shanmuga pandiyan ஒரு யானைக்குட்டி வழக்குறாரு. இவரோட அப்பா kasthuriraja  மண்பாண்டங்களை செய்யறவரு. அப்புறம் velu க்கு ஒரு தங்கச்சி யும் இருக்கும்.   ஒரு கட்டத்துக்கு மேல வேலு  இந்த யானையை தன்னோட பையன மாதிரி பாவிக்க ஆரம்பிச்சுடுவாரு. நெறய கடன் இருக்கறதுனால இந்த யானையை அங்க அங்க வாடகைக்கு விட்டு அதுல வர பணத்தை வைச்சு தான் இவரு கடனை அடைக்குறாரு. ஆனா திடுறுனு forest  officers இவரோட யானையை கூட்டிட்டு போயிடுறாங்க. ஆனா இந்த யானை forest officers ஓட கட்டுப்பாட்டுல இருந்து காணாம போயிடுது. இதை கண்டுபிடிக்கறதுக்காக வேலு வராரு. அப்போ தான்  அந்த மக்கள் ஓட நிலைமையை பாக்குறாரு. இந்த மக்களை காப்பதுனரா? தன்னோட யானையை கண்டுபிடிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


sanmuga pandiyan ஓட நடிப்பு ரொம்ப அழகா இருந்தது. அது மட்டுமில்லாம அவரோட dialogue delivery , body language னு எல்லாமே super அ இருந்தது. யானை க்கும் இவருக்கும் இருக்கற அந்த பந்தத்தை ரொம்ப அழகா இந்த படத்துல explore பண்ணிருக்காங்க. யாமினி chandar ஓட நடிப்பும் ரொம்ப natural அ இருந்தது. இந்த படத்துல villain அ வர garudan ram ஒரு மிரட்டலான நடிப்பை குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். மத்த supporting actors ஓட நடிப்பும் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. AI அ use பண்ணி captain vijayakanth யும் கொண்டு வந்திருக்காங்க. அந்த scenes எல்லாமே பாக்குறதுக்கு அவ்ளோ தத்ரூபமா இருந்தது. 


s r sathishkumar ஓட cinematography super அ இருந்தது. யானைகள் வர scenes அ இருக்கட்டும் அப்புறம் அடர்ந்த காட்டுக்குள்ள நடக்கற சண்டை scenes அ  இருக்கட்டும் இது எல்லாமே super அ இருந்தது. ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச கதையை இருந்தாலும் அதா எடுத்துட்டு வந்த விதம் நல்ல இருந்தது. இந்த படத்தை miss பண்ணாம பாருங்க. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment