Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Thursday, 5 June 2025

தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடியிலும் வரவேற்பு குறையாத தேவயானி நடித்துள்ள

 *தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடியிலும் வரவேற்பு குறையாத தேவயானி நடித்துள்ள ‘நிழற்குடை’* 







 *‘நிழற்குடை’க்கு ஓடிடியிலும் வரவேற்பு ; மகிழ்ச்சியில் தேவயானி*


*'ஆஹா' ஓடிடி தளத்தில் வரவேற்புடன் ஸ்ட்ரீமிங் ஆகும் தேவயானியின் ‘நிழற்குடை’*


சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் பெரிய படங்களுக்கு வசூல் ரீதியாக கூட சவால் விடத் துவங்கியுள்ளன. இதனால் நல்ல தரமான கதை அம்சம் கொண்ட படங்களை வெளியிடுவதில் தற்போது ஒரு போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம்.


திரையரங்கு உரிமையாளர்களும் ஒடிடி நிறுவனங்களும் கூட இது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் மீது தங்கள் பார்வையை திருப்ப துவங்கியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் குடும்பக் கதையம்சத்துடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் தான் நிழற்குடை.


தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வெளியான இப்படத்தை   சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப்படம்  இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும்  பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் சொல்லியிருந்தது.

,

இந்த படம் வெளியான போது நாளிதழ்கள் இணையதளங்கள், யூட்யூப்  சேனல்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுகளையும் பெற்றதோடு, திரையரங்கில் பார்த்து ரசிகர்களும் ஒரு உணர்வுபூர்வமான படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது என தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.


அப்படி திரையரங்கில் வரவேற்புடன் ஓடிய நிழற்குடை படம் தற்போது ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி ( ஸ்ட்ரீமிங்) ) வருகிறது. ஓடிடியில் படம் வெளியான நாளில் இருந்து இப்போது வரை பல லட்சம் நிமிடங்கள் நிழற்குடை படம் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் திரையரங்குகளில் இந்த அருமையான கதை அம்சம் கொண்ட படத்தை பார்க்க தவறியவர்கள் கூட ஓடிடியில் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.


இந்த படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்திருந்த நடிகை தேவயானி படத்தை தூணாக தாங்கி பிடித்திருந்தார். திரையரங்குகளிலும் ஓடிடியிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தேவயானி.


*மக்கள் தொடர்பு ; A.ஜான்*

No comments:

Post a Comment