Featured post

GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI*

 *'GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI* *‘GANDHI – Mantras of Compassion’ - A Transformation...

Monday, 30 June 2025

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும்

 *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது !!*



பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.  


மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ்  நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா  இணைந்து வழங்கிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப் பார்வையிலான முயற்சியையும், பிரம்மாண்டத்தையும் மேலும் அதிகப்படுத்தும்.


இயக்குநர் பூரி ஜெகநாத், படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார். திரைக்கதை எழுதுவதிலிருந்து நடிகர் தேர்வு வரை, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை ரசிக்கும் வகையில், இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி வருகிறார்.


இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், தபு மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.


இந்திய முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான படைப்பாக  உருவாகும், இந்த பான் இந்தியஎண்டர்டெயினர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இப்படாம்  மற்ற தகவல்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


*நடிகர்கள்* 


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார். 


*தொழில்நுட்பக் குழு*


எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் 

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 

CEO : விசு 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

No comments:

Post a Comment